டாப் 10

உலக கோப்பை தொடரில் விளையாடாத 7 பிரபல கிரிக்கெட் வீரர்கள்

ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் எப்படியாவது உலக கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்பது கனவாக இருக்கும். நாட்டுக்காக நன்றாக விளையாடி உலக கோப்பை தொடரில் தங்களுடைய பங்கை கொடுத்து கோப்பையை வென்று அதன் நினைவை தங்கள் வாழ்நாளில் வைத்துக் கொள்ள அனைத்து வீரர்களும் ஆசைப்படுவார்கள்.

- Advertisement -

ஆனால் ஒரு சில வீரர்களுக்கு மட்டுமே அந்த கனவு நிறைவேறும். உலக கோப்பை தொடரில் விளையாடும் அது ஒரு சிலருக்கு கனவாக இருந்து வருகிறது. அப்படி நன்றாக விளையாடியும் உலக கோப்பை தொடரில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் விளையாட முடியாமல் போன பேர்களைப் பற்றி பார்ப்போம்.

ஸ்டூவர்ட் மேக்கில்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டுவார்ட் லெக் ஸ்பின்னர் ஆவார். ஷேன் வார்னே போல இவர் பந்தை நன்றாக சுழற்ற கூடிய வீரர் ஆவார். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 200 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். இருந்த போதிலும் அவருக்கு அவ்வளவாக ஒருநாள் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அவருக்கு 3 ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாட வாய்ப்பு கிடைத்தது. 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அவர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அந்த மூன்று போட்டிகளிலும் அவரது பௌலிங் அவரேஜ் 17.50 ஆகும். குறிப்பாக ஒரு போட்டியில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். நல்ல திறமையான வீரராக இருந்த போதிலும் அவருக்கு உலக கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது வேதனை தரும் விஷயமாகும்.

- Advertisement -

எரப்பள்ளி பிரசன்னா

இந்திய பந்து வீச்சாளரான பிரசன்னா, 1970 மற்றும் 80களில் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியவர். இருந்தபோதிலும் இவருக்கு ஒரு நாள் போட்டிகளில் அவ்வளவாக விளையாடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

பிரசன்னா இந்திய அணிக்காக 9 லிஸ்ட் A போட்டிகளில் விளையாடியுள்ளார் அந்த ஒன்பது லிஸ்ட் A போட்டிகளில் மொத்தமாக 17 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இவரது பௌலிங் அவரேஜ் 18.7 ஆகும். இவ்வளவு சிறப்பாக விளையாடக் கூடிய வீரர் ஒருநாள் போட்டியில் ஏன் விளையாடவில்லை என்பதும், உலக கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பு வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அலஸ்டேர் குக்

இங்கிலாந்து காக ஒரு காலகட்டங்களில் ஒருநாள் போட்டியில் மிக அற்புதமாக விளையாடிய வீரர் அலஸ்டேர் குக் ஆவார். இவர் விளையாடிய விதத்தை பார்த்து இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் இவரை 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் விளையாட வைத்து அந்த தொடரை தலைமை தாங்கும் பொறுப்பையும் வழங்கலாம் என்று யோசித்து வந்தது.

ஆனால் அதற்கு முன்னர் ஸ்ரீலங்கா சென்று சரியாக இவர் விளையாடாத காரணத்தினாலும், அதேசமயம் அணியை சரியாக தலைமை தாங்குவது காரணத்தினாலும் இவரை இங்கிலாந்து படிப்படியாக தவிர்த்தது. கேப்டன் பதவியை படித்ததோடு மட்டுமல்லாமல் இவருக்கு வழங்கப்பட இருந்த உலக கோப்பை வாய்ப்பையும் பறித்தது. அதன் பின்னர் இவர் அவ்வளவாக ஒருநாள் போட்டிகளிலும் விளையாட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜஸ்டின் லாங்கர்

ஆஸ்திரியாவை சேர்ந்த தலை சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரரான இவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை புரிந்தது போல் ஒருநாள் கிரிக்கெட்டில் இவரால் சாதனை புரிய முடியவில்லை. இவர் இதுவரை 8 ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளார். 8 ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 160 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இவரது ஆவரேஜ் 32 ஆகும்.

இருந்தபோதிலும் இவருக்கான ஒருநாள் போட்டிகளின் கனவு கனவாகவே போனது. அதன் பின்னர் இவருக்கு 1999 மற்றும் 2003 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடர்களில்  வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், இவருக்கு எந்தவித வாய்ப்பும் கிடைக்கவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும். தற்பொழுது இவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

விவிஎஸ் லக்ஷ்மன்

அனைவருக்கும் இவரது பெயரைப் பார்த்ததும் ஆச்சரியம் ஏற்படும். இந்தியாவுக்காக பல டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விவிஎஸ் லக்ஷ்மன் பல இன்னிங்ஸ்களில்  இந்தியாவுக்காக வெற்றிகளை குவித்து உள்ளவர். 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8781 ரன்களை குறித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் இவரது அவரேஜ் 45.97 ஆகும்.

ஆனால் டெஸ்ட் போட்டிகளில் இவர் ஜொலிப்பது போல் ஒருநாள் போட்டியில் ஜொலிக்க தவறினார். 86 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2338 ரன்களை மட்டும் தான் அவரால் படிக்க முடிந்தது. ஒருநாள் போட்டிகளில் இவரது அவரேஜ் 30 தான். அதன் காரணமாகவே அவருக்கு அவ்வளவாக ஒருநாள் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. 2003ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் இவருக்கு வாய்ப்பு கிடைக்குமென்று ஒரு பக்கம் கருதினாலும், அந்த ஆண்டு இவர் காண வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும்

இஷாந்த் சர்மா

இஷாந்த் சர்மா இந்திய அணியின் டெஸ்ட் வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர். 2007ஆம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். பெரும்பாலும் இதுவரை டெஸ்ட் போட்டியில் தான் விளையாட வைத்திருக்கிறார்கள். முதன்முதலாக தோனியின் தலைமையில் விளையாடியபோதும் சரி, இப்போது விராட் கோலியின் தலைமையில் விளையாடும் போதும் சரி, இவருக்கு டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என்ற பெயர் தான் இருக்கிறது.

101 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இஷாந்த் ஷர்மா 80 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார் இவரது காலகட்டத்தில் கிட்டத்தட்ட நான்கு ஒரு நாள் உலக கோப்பை தொடரில் நடைபெற்றுவிட்டன. ஆனால் ஒரு உலக கோப்பை தொடரில் விளையாடியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிஷ்  மார்டின்

இவர் நியூசிலாந்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஆவார். கடைசியாக 2013ம் ஆண்டில் சர்வதேச போட்டிகளில் விளையாடினார். மொத்தம் 73 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள கிரிஸ்ட் மார்ட்டின் 21 ஒருநாள் போட்டியில் தான் விளையாடியிருக்கிறார். இவ்வளவு டெஸ்ட் போட்டியில் ஆடியுள்ள இவர் உலக கோப்பை தொடரில் விளையாட ஒரு முறை கூட வாய்ப்பு கொடுக்கப்பட வில்லை.

Published by