சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த ஆண்டு நிச்சயமாக வெளியேற்ற வாய்ப்புள்ள 5 வீரர்கள்

0
292
Dwayne Bravo and Imran Tahir

அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் முற்றிலுமாக ஒவ்வொரு அணியும் புதிய அணியாக இருக்கும். தற்பொழுது உள்ள அணியில் இருந்து மூன்று முதல் நான்கு வீரர்களை தக்க வைக்க முடியும். மேற்படி இரண்டு வீரர்களை ஏலத்தில் நினைத்தால் வாங்கிக் கொள்ளலாம்.

மற்றபடி ஒவ்வொரு அணியும் கிட்டத்தட்ட புதிய வீரர்களை ஏலத்தில் வாங்கி ஒரு அணியை உருவாக்க வேண்டி இருக்கும். எனவே அதன்படி ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் இருக்கும் முக்கால்வாசி வீரர்களை வெளியிட வேண்டியிருக்கும். அதன் அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயமாக இந்த வீரர்களை கடந்த ஆண்டு வெளியேற்ற வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. அந்த வீரர்கள் யார் என்று தற்போது பார்ப்போம்.

- Advertisement -

இம்ரான் தாஹிர்

42 வயதான இம்ரான் தாஹிர் 2018ஆம் ஆண்டு முதல் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். 2018 ஆம் ஆண்டு சென்னை அணி கோப்பையை கைப்பற்றியதற்கு இவரும் ஒரு முக்கிய காரணமாக விளங்கினார். கடந்த இரண்டு வருடங்களாகவே இவருக்கு அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதில்லை.

இவருக்கு அடுத்த ஆண்டு வயது 43 ஆக இருக்கும். எனவே இவரை தக்க வைத்தால் அடுத்த 5 ஆண்டுகள் இவரை சென்னை அணியால் விளையாட வைக்க முடியாது. அதனடிப்படையில் நிச்சயமாக அடுத்த ஆண்டு இவரை சென்னை அணி வெளியேற்றி விட அதிக வாய்ப்புள்ளது.

ராபின் உத்தப்பா

கொல்கத்தா அணியில் மிக சிறப்பாக விளையாடிய ராபின் உத்தப்பா ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் அணிக்காக விளையாட ஆரம்பித்தார். மிக சறுக்கலாக இவரது ஆட்டம் அமைய ராஜஸ்தான் அணி நிர்வாகம் இவருக்கு வாய்ப்பை கம்மியாக வழங்கியது. எனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை நம்பி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வாங்கியது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இந்த ஆண்டு ஒரு போட்டியில் கூட இவரை சென்னை அணி நிர்வாகம் விளையாட வைக்கவில்லை.

- Advertisement -

இம்ரான் தாகிர் போலவே வயது காரணமாக அடுத்த ஆண்டுவரை சென்னை அணி தக்கவைக்க வாய்ப்புகள் மிகக் குறைவு. கண்டிப்பாக இளம் வீரர்களை தான் சென்னை அணி நிர்வாகம் குறி வைக்கும். எனவே நிச்சயமாக அடுத்த ஆண்டு இவர் சென்னை அணியில் விளையாட மாட்டார்.

டுவெய்ன் பிராவோ

முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட தொடங்கி அதன் பின்னர் 2011ம் ஆண்டு சென்னை அணியில் விளையாட தொடங்கினார். இவர் வந்த முதல் வருடமும் சென்னை அணிதான் சாம்பியன் அணியாக வலம் வந்தது. அந்த தொடர் முதல் பல ஆண்டுகளாக சென்னை அணிக்காக பல முக்கிய வெற்றிகளை வாங்கிய தந்ததில் இவருக்கும் ஒரு பங்கு இருக்கிறது.

- Advertisement -

ஆனால் இவருக்கு இந்த வருடம் ஐபிஎல் தொடரில் அவ்வளவாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இவருக்கும் வயதாகிக் கொண்டே போகிற காரணத்தினால், இந்த ஆண்டு தொடரில் கூட தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடியை சென்னை அணி நிர்வாகம் விளையாட வைத்தது. எனவே அடுத்த ஆண்டுவரை சென்னை அணி நிர்வாகம் நிச்சயமாக அணியில் இருந்து வெளியேற்றிவிடும் என்று எதிர்பார்க்கலாம்.

சதீஸ்வர புஜாரா

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக மிக சிறப்பாக விளையாடக் கூடிய ஒரு வீரர் என்றால் அது இவர்தான். இவரை தற்போதைய டிராவிட் என்று கூட சொல்லும் அளவுக்கு மிக அற்புதமாக இந்திய டெஸ்ட் அணியில் விளையாடி வருகிறார். இருந்தாலும் இவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவ்வளவாக காணப்படுவதில்லை. இவரை அனைத்து அணைகளும் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும்தான் இவர் சரிப்பட்டு வருவார் என்று நினைத்து விட்டதுதான் உண்மை.

இருப்பினும் சென்னை அணி இந்தாண்டு நடந்த ஏலத்தில் இவரை வாங்கியது. இவரும் சென்னை அணிக்காக விளையாடும் போது மிக சந்தோசமாக இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார். இருப்பினும் இவரை ஒரு போட்டியில் கூட சென்னை அணி நிர்வாகம் விளையாட வைக்க வில்லை. எனவே நிச்சயமாக அடுத்த ஆண்டு இவரை தக்கவைக்கவும் அல்லது மீண்டும் வாங்கவோ அந்த அணி முடிவு செய்யாது என்று எதிர்பார்க்கலாம். எனவே இவரும் அடுத்த ஆண்டு சென்னை அணியால் வெளியேற்றப்பட அதிக வாய்ப்புள்ளது.

அம்பத்தி ராயுடு

மும்பை அணியில் விளையாடி வந்த அம்பத்தி ராயுடு 2018 ஆம் ஆண்டு சென்னை அணியில் விளையாட தொடங்கினார். அந்த ஆண்டு முதல் அணிக்கு தேவைப்படும் நேரங்களில் மிக அற்புதமாக தன்னுடைய திறமையை காண்பித்து வரும் அம்பத்தி ராயுடு இந்த ஆண்டு கூட மிக சிறப்பாக விளையாடினார்.

இருந்தாலும் அடுத்த மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு சென்னை அணியில் இவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்க முடியாது. இவருக்கு அடுத்த ஆண்டு வயது 36 ஆகியிருக்கும். எனவே வயது காரணமாக நிச்சயமாக இவரை தக்கவைக்க சென்னை அணி நிர்வாகம் யோசிக்கும் என்று கூறலாம். எனவே இவரையும் சென்னையை நிர்வாகம் அடுத்த ஆண்டு வெளியேற்றிவிடும், அதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.