“இது போன்ற ஆடுகளங்கள் தான் தொடர்ந்து அமைக்கப்பட்டு வருகின்றன” மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக பிட்ச் விவாதத்தை தோண்டிய ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன்!

0
867

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகின்ற புதன்கிழமை மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் வைத்து நடைபெற இருக்கிறது . இந்தப் போட்டிக்காக இந்தூர் சென்றுள்ள இரு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் .

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடர் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரிலும் விளையாட இருக்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி நாக்பூரில் தொடங்கியது. இந்தப் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்று இருக்கிறது.

- Advertisement -

நாளை மறுநாள் நடைபெற இருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற கடுமையாக முயற்சிக்கும். இந்நிலையில் போட்டி துவங்குவதற்கு முன்பே ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் விமர்சகர்மான மார்க் டைலர் ஆடுகளங்களை பற்றிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். இதுபற்றி வைல்ட் வேர்ல்ட் என்ற தொலைக்காட்சி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியின் போது தெரிவித்திருக்கிறார்.

இந்தப் பேட்டியின் போது தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட மார்க் டைலர் ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஆடுகளங்களின் தன்மை இந்திய ஆடுகளங்களின் தன்மையிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டது எனினும் தற்காலங்களில் ஆஸ்திரேலிய வீரர்கள் அதிகமாக ஐபிஎல் தொடர்களில் விளையாடி வருகின்றனர். ஆனால் டெஸ்ட் போட்டிகளுக்காக அமைக்கப்படும் ஆடுகளங்கள் தனித்துவத்துடனே உருவாக்கப்படுகின்றன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தியாவில் ஆடுகளங்களை மெதுவான வேகத்துடன் வந்து திரும்பும் வகையில் டெஸ்ட் போட்டிகளுக்காக அமைக்கின்றனர். இது அவர்களின் பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் இருக்கிறது என்று கூறினார்.

மேலும் இந்த விஷயம் பற்றி தொடர்ந்து பேசிய அவர்” இது போன்ற ஆடுகளங்கள் ஆஸ்திரேலியா வீரர்களுக்கு பரீட்சியமானவை அல்ல. இதன் காரணமாக அவர்கள் தாக்குதல் பாணி ஆட்டத்திற்கு சென்றனர். அது ஒரு நேர்மறையான சிந்தனை தான் என்றாலும் அதற்குரிய டெக்னிக் நம் வீரர்களிடம் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்”என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

தனது கிரிக்கெட் விளையாடும் நாட்களில் இந்தியாவில் ஆடிய அனுபவங்களை பகிர்ந்து கொண்ட டைலர் ” இந்திய ஆடுகளத்தில் நான் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் ஆடியதில்லை. 98 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணியிடம் 1-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தோம். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் பெங்களூரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியை கைப்பற்றினோம். பெங்களூரு ஆடுகளம் இரு அணி வீரர்களுக்கும் ஒத்துழைக்கும் வகையில் சமமாக அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்றைய காலகட்டங்களில் அது போன்ற ஆடுகளங்கள் அமைக்கப்படுவதில்லை. பந்துகள் மெதுவாக திரும்பும் வகையில் ஸ்லோ டர்னர் ஆடுகளையே பெரும்பாலும் அமைக்கின்றனர் என்று கூறி முடித்தார் மார்க் டைலர்.