உலககோப்பைக்கு செல்லும் இந்திய அணியில் இந்த ஒரு விஷயம் சுத்தமாக சரியில்லை, மாற்றிவிடுங்கள் – மிச்செல் ஜான்சன் அறிவுரை!

0
3566

2020 உலக கோப்பைக்கு செல்லும் இந்திய அணியில் வெறும் 4 வேத பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள் இது ஆபத்தாக முடியும் என்று மிச்சல் ஜான்சன் அறிவுரை கூறியுள்ளார்.

செப்டம்பர் 12ஆம் தேதி டி20 உலக கோப்பைக்கு செல்லும் இந்திய அணி அறிவிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. உள்ளூர் முன்னாள் வீரர்கள் மற்றும் விமர்சனர்கள் மட்டுமல்லாது, வெளிநாட்டில் உள்ள முன்னாள் வீரர்களும் இந்திய அணி குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

- Advertisement -

குறிப்பாக இந்திய அணியின் பந்துவீச்சு மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஒருவர் இளம் வீரர் அர்ஷதீப் சிங் எடுக்கப்பட்டது குறித்தும் முகமது சமி வெளியில் அமர்த்தபட்டது குறித்தும் கடுமையாக விமர்சித்தார். சுனில் கவாஸ்கர், திலீப் வெங்சர்க்கார், கபில் தேவ் போன்றோரும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு குறித்து விமர்சனங்களை முன் வைத்திருக்கின்றனர்.

தற்போது ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிச்சல் ஜான்சன் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு குறித்து கடுமையாக விமர்சித்திருக்கிறார். அவர் கூறுகையில், “இந்திய அணி நான்கு வெகப்பந்துவீச்சாளர்கள், இரண்டு சுழல்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்கிற வகையில் அணியை தேர்வு செய்திருக்கிறது. வழக்கமாக இந்தியா இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு சுழல்பந்து வீச்சாளர்கள் இவர்களுடன் ஒரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்கிற பாணியில் ஒவ்வொரு போட்டியிலும் களமிறங்கும். ஆஸ்திரேலியா மைதானத்தில் இது மிகப்பெரிய ரிஸ்க்காக இருக்கும். ஏனெனில் ஆஸ்திரேலியா மைதானம் முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும். சுழல் பந்துவீச்சு பெயரளவிலையே இருக்கும். அந்த நேரத்தில் வெறும் நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இருப்பது மிகப்பெரிய ரிஸ்க்.”

- Advertisement -

“உதாரணமாக, பெர்த் போன்ற மைதானம் வேகப்பந்து வீச்சிற்கு மட்டுமே எடுபடும். அங்கு நான்கு அல்லது ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை. அப்போது இந்திய அணி என்ன செய்யும்?. அனைத்து வீரர்களையும் வைத்து விளையாடிவிட்டால், யாரேனும் ஒருவருக்கு காயம் ஏற்படும்பொழுது பெருத்த அடியாக இருக்கும். ஆகையால் டி20 உலக கோப்பைக்கு முன்னதாக ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டியது இருந்தால் அது வேகப்பந்து வீச்சாளர்கள் மத்தியிலேயே மாற்றம் செய்ய வேண்டும். கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை அணியில் வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.” என்றார்.

ஆஸ்திரேலிய மைதானம் என்றாலே 145 முதல் கிமீ வேகத்தில் பந்துவீச வேண்டும் என்று அவசியம் இல்லை. அணியில் யாராவது ஒருவர் மட்டும் அந்த வேகத்தில் வீசினால் போதுமானது. மற்ற வீரர்கள் அந்த ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு பக்கபலமாக ரன்களை கட்டுப்படுத்தி கொடுத்தால் போதும் என்றும் அறிவுறுத்தினார்.

- Advertisement -