“2 கேப்டனும் வேற வேற.. ஆனா இவரைத்தான் மக்கள் எப்பவும் மறக்க மாட்டாங்க” – இர்பான் பதான் பேட்டி

0
113
Virat

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் முகத்தை மாற்றி அமைத்தவர் என்றால் அது அப்போதைய கேப்டன் விராட் கோலிதான். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக தொட்ட உயரங்களின் புள்ளி விபரங்கள் அசாத்தியமானது.

இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் என்றாலே ஒரு வேகப்பந்துவீச்சாளர் மற்றும் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் என்கின்ற அளவில்தான் ஆரம்பகட்டத்தில் நிலைமைகள் இருந்தன.

- Advertisement -

மேலும் ஆரம்பத்தில் கபில்தேவ் இடையில் ஸ்ரீநாத், இறுதியாக ஜாகீர் கான் போன்ற சில வேகப் பந்துவீச்சாளர்கள் இந்தியாவில் வேகம் மற்றும் பந்துவீச்சு திறமையில் சிறந்தவர்களாக இருந்தார்கள்.

அண்டை நாடான பாகிஸ்தான் வேகப் பந்து வீச்சு தொழிற்சாலை என்று அழைக்கப்பட்ட நேரங்களில், இந்தியா வேகப்பந்து வீச்சில் மிகவும் பின்தங்கி இருந்தது. இதன் காரணமாக இந்திய அணி டெஸ்ட் தொடர்களை வெளிநாட்டில் வெல்வது முடியாத ஒன்றாகவே இருந்தது.

இதை உணர்ந்த டெஸ்ட் கேப்டன் விராட் கோலி வேகப்பந்துவீச்சாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்ததோடு, டெஸ்ட் தைரியமான முறையில் விளையாடுவதற்கு வீரர்களை ஊக்குவித்தார். மேலும் அவர் உடல் தகுதியில் மிகவும் கண்டிப்பான கேப்டனாக இருந்தார்.

- Advertisement -

இதனால் இந்திய வேகப்பந்து வீச்சுத்துறை பெரிய எழுச்சி கண்டது. மேலும் இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டையும் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் கைப்பற்றிய அதிசய நிகழ்வு நடந்தது. விராட் கோலி தைரியமாக இந்தியாவில் வேகப்பந்துவீச்சுக்கு ஆதரவான விக்கெட்டை அமைப்பதற்கு ஆதரவாக இருந்தார்.

மேலும் களத்தில் கேப்டனாக மற்றும் ஒரு வீரராக அவர் காட்டிய உற்சாகம் மற்றும் ஆக்ரோஷம் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டை வேறு நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்களும் விரும்பும் படி அமைந்தது. ஆனால் தற்பொழுது நிலைமைகள் ரோஹித் சர்மா தலைமையில் மாறி மீண்டும் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களும் ஒரு வேகப் பந்துவீச்சாளர் என்கின்ற நிலையும் உருவாக ஆரம்பித்திருக்கிறது.

இருவரது கேப்டன்சி வித்தியாசம் குறித்து பேசி உள்ள இர்பான் பதான் கூறும்பொழுது ” விராட் கோலி அணியை வழிநடத்திய விதம் மற்றும் அணியில் அவர் ஏற்படுத்திய மாற்றங்கள் பாராட்டுக்குரியது. மக்கள் அவரது கேப்டன்சியை பல ஆண்டுகளாக ஞாபகத்தில் வைத்திருப்பார்கள். டெஸ்ட் போட்டியின் ஐந்து நாட்களிலும் அவர் ஆக்ரோஷத்தை சுமந்து களத்தில் செயல்பட்டார்.

மறுபுறம் ரோகித் சர்மாவின் கேப்டன்சி முற்றிலும் மாறுபட்ட ஒன்று. அவர் தந்திரோபாயமாக இருக்கிறார். அவர் விராட் கோலி அளவுக்கு தன்னுடைய ஆக்ரோஷத்தை களத்தில் காட்டுவதில்லை.

இதையும் படிங்க : “ஷாமர் ஜோசப்பை சேர்க்கவும் முடியல.. விலக்கவும் முடியல.. பெரிய தலைவலி” வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் டேரன் சமி பேட்டி

எனவே விராட் கோலி கேப்டனாக இருந்த பொழுது சூழ்நிலைகள் வேறுபட்டது. இப்போது இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா இருக்கிறார். ஆனால் இந்த இந்திய அணி மீண்டும் வலுவாக திரும்பி வர வேண்டும் என்று விரும்புகிறேன். அதை நிச்சயமாகச் செய்ய முடியும்” என்று கூறியிருக்கிறார்.