“நீ இந்தியாகாரனா? இப்போ நீ சந்தோஷமா இருப்ப!” – பத்திரிக்கையாளர் மொபைல் போனை பிடிங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர்!!

0
223

நீ இந்தியாவிலிருந்து தான் வந்திருப்பாய், நீ மிகவும் மகிழ்ச்சியாக இருப்பாய் என்று தன்னிடம் கேள்வி கேட்ட பத்திரிக்கையாளரை கடுமையாக சாடியுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமேஷ் ராஜா.

ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. துபாய் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, பாகிஸ்தானின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 58 ரன்கள் 5 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பிறகு ஹசரங்கா மற்றும் ராஜபக்சே இருவரும் போராடி வந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்திருந்தது. கடினமான இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு ரிஸ்வான் நன்றாக விளையாடி வந்தார். ரிஸ்வான் 55 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அவருக்கு அடுத்தபடியாக இப்திகர் அஹமது 32 ரன்கள் அடித்திருந்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஆட்டமிழக்க 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. ஆறாவது முறையாக ஆசிய கோப்பை தொடரை வென்றுள்ளது.

- Advertisement -

இப்போட்டியை துபாய் மைதானத்தில் இருந்து கண்டுகளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரமீஷ் ராஜா பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவிய பிறகு மைதானத்திற்கு வெளியே வந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து பத்திரிக்கையாளர்கள் கேள்விகளுக்கு பொறுமையே இல்லாமல் சரமாரியாக பதிலளித்து வருகிறார் இதன் காரணமாக பல விமர்சனங்களையும் இவர் சந்தித்து இருக்கிறார். தற்போது அதுபோன்ற ஒரு நிகழ்வு மீண்டும் நடந்திருக்கிறது.

பத்திரிகையாளர் ஒருவர்: “ஏற்கனவே வெள்ளம் காரணமாக சோகத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு இது மேலும் சோகமாக இருக்கும் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டக,

ரமிஸ் ராஜா: “நீ இந்தியாவிலிருந்து வந்திருக்கிறாய்! உன் மக்கள் நிச்சயம் மகிழ்ச்சியாக இருப்பார்கள்” என்றார்.

- Advertisement -

நிருபர்: “எங்கள் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை”

ரமிஸ் ராஜா: பிறகு யார் இருக்கிறார்கள் மகிழ்ச்சியாக??

நிருபர்: பாகிஸ்தான் ரசிகர்கள் அழுது கொண்டு மைதானத்தை விட்டு சென்று கொண்டிருக்கிறார்கள் அதற்கு உங்கள் பதில் என்ன?

ரமிஸ் ராஜா: “நீ பொதுவாக மக்கள் என்று பேசிக் கொண்டிருக்கிறாய். இங்கிருந்து செல்!” என்று கூறினார்.

அதன் பிறகு ரமேஷ் ராஜாவை வீடியோ எடுத்தபடி பின்தொடர்ந்து மற்றொரு பத்திரிகையாளரை அழைத்து அவரது செல்போனை பிடுங்கிக்கொண்டு மிரட்டினார். மேலும் அருகில் நின்று கொண்டிருந்தவர் ரமீஷ் ராஜாவின் தோளில் கை வைத்தபோது, “உன் கையை எடுத்து வேறு எங்காவது வைத்துக் கொள். என் மீது வைக்காதே! அங்கு சென்று தள்ளி நில்!” என்று திமிராகவும் பேசினார்.

ரமீஷ் ராஜாவின் இந்த தரக்குறைவான செயல் தற்போது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது