ஆஸ்திரேலியா டெஸ்ட் கேப்டன் பேட் கம்மின்ஸ் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பையை தங்களுடைய ஆஸ்திரேலியா அணியால் வெல்ல முடியும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
முதலில் அறிவிக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலிய டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற்று இருந்த கம்மின்ஸ் பிறகு காயத்தின் காரணமாக விலகினார். இந்த நிலையில் அவர் ஆஸ்திரேலியா அணி இந்த முறை டி20 உலகக் கோப்பையை வெல்லும் என சில காரணங்களை முன்வைத்து பேசி இருக்கிறார்.
பாகிஸ்தானுடன் படுதோல்வி
ஆஸ்திரேலியா அணி டி20 உலக கோப்பைக்கு தயாராக பாகிஸ்தான் சென்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரின் மூன்று போட்டிகளையும் பாகிஸ்தான் அணியிடம் மிக மோசமான முறையில் விளையாடி தோல்வி அடைந்தது. இது ஆஸ்திரேலியா டி20 அணியின் மீது அவநம்பிக்கையை உருவாக்கி உள்ளது.
ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தான் சுழல் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு விளையாட முடியாமல் மிகவும் தடுமாறினார்கள். அதே சமயத்தில் ஆஸ்திரேலிய சுழல் பந்துவீச்சாளர்களை பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் எளிதாக விளையாடி ரன்கள் எடுத்தார்கள். இதனால் ஆஸ்திரேலியா பேட்டிங் மற்றும் பவுலிங் யூனிட் பலவீனமாக தெரிகிறது.
2021ல் நடந்தது
இதுகுறித்து கம்மின்ஸ் பேசும்பொழுது “பாகிஸ்தான் அணி உடனான தோல்வியை எங்களுடைய வீரர்கள் வெகு எளிதாக மறந்து முன்னேறி செல்ல முடியும். ஏனென்றால் 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக நாங்கள் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரை இழந்திருந்தோம். ஆனால் அதற்குப் பிறகு விளையாடி அந்த உலகக் கோப்பை தொடரை நாங்கள் வென்றோம். நாங்கள் ஃபார்முக்கு திரும்பி வருவதற்கு கடந்த காலத்தை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை”
இதையும் படிங்க : ஆஸி இல்லை.. டி20 உகோ-ல் இந்திய அணிக்கு இவர்கள்தான் பெரிய தலைவலி.. சிறப்பு பலம் இருக்கு – வருண் ஆரோன் தகவல்
” எங்களிடம் உலகத்திலேயே அதிக சக்தி வாய்ந்த தொடக்க ஆட்டக்காரர்கள் மார்ஸ் மற்றும் ஹெட் இருக்கிறார்கள். இத்துடன் மிடில் வரிசையை கவனித்துக் கொள்வதற்கு டிம் டேவிட், மேக்ஸ்வெல் வருகிறார்கள். மேலும் ஆசிய கண்டத்தில் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தன்னை ஏற்கனவே நிரூபித்திருக்கும் ஆடம் ஜாம்பா எங்களிடம் இருக்கிறார். எனவே நாங்கள் இந்த உலகக் கோப்பையை வெல்ல முடியும்” என்று கூறி இருக்கிறார்.






