கோலி, பண்ட் இல்லை.. இவரை சைலன்ட் ஆக்குனா நாங்க இந்தியாவை ஜெயிக்கிறது உறுதி – பேட் கம்மின்ஸ் பேட்டி

0
2867

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் ட்ராபி கிரிக்கெட் தொடர் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணி கேப்டனான பேட் கம்மின்ஸ் இந்திய வீரர்கள் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

ஆஸ்திரேலிய மண்ணில் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணி கடந்த 10 வருடங்களாக தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. 2018 மற்றும் 19ஆம் ஆண்டுகளில் விராட் கோலி தலைமையில் டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி அதற்குப் பிறகு ரகானே தலைமையில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. அதற்குப் பிறகு ரோகித் சர்மா தலைமையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இங்கும் தோல்வியடைந்தது.

எனவே இந்த தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆஸ்திரேலியா அணி இந்திய அணிக்கு எதிராக பல திட்டங்களை தீட்டி வருகிறது. இந்திய அணியின் பும்ரா சிறந்த பந்துவீச்சாளர் எனவும் அவரை அமைதியாக வைத்திருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இவரை அமைதியாக வைத்திருக்க முயற்சிப்போம்

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது ” நான் பும்ராவின் மிகப்பெரிய ரசிகன். அவர் ஒரு அற்புதமான பந்துவீச்சாளர் என்று நான் நினைக்கிறேன். எனவே அவரை அமைதியாக வைத்திருக்க முடிந்தால் இது நாங்கள் தொடரையை வெல்வதற்கு மிகப்பெரிய வகையில் உதவியாக இருக்கும். மேலும் அவருடன் ஆஸ்திரேலியாவில் அதிகம் விளையாடாத சில இளம் வீரர்களும் இந்த தொடரில் விளையாட இருக்கின்றனர்.

இதையும் படிங்க:20 வருஷம் ஆச்சு.. நான் அங்க உள்ளே போன 2 நிமிஷத்துல 3 மணி நேர படம் ஓடுற மாறி இருந்துச்சு – கே எல் ராகுல் உணர்ச்சிப் பேட்டி

நான் இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இணைந்து விளையாடியது இல்லை.அதனால் எனக்கு அவர் குறித்து அதிகம் தெரியாது. ஆனால் இந்தியா அழகாக கட்டமைக்கப்பட்டுள்ள அணியாகவும் நன்கு திட்டமிடப்பட்ட அணியாகவும் இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக நாங்கள் கடந்த சில ஆண்டுகளாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைகளும் ஒரு உலகக்கோப்பையும் வெற்றி பெற்று இருக்கிறோம். எனவே அதுபோல ஒரு வெற்றியை தற்போது பெற முயற்சிப்போம். மேலும் இந்திய அணி கடந்த தொடர்களில் வெற்றி பெற்றதை மீண்டும் நினைவுபடுத்த முயலும்” என்று கூறியிருக்கிறார். நாளை நடைபெற உள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடிட்டு அதற்கு பிறகு நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியா அணியோடு டெஸ்ட் தொடர் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -