பேட் கம்மின்ஸ் 15 பந்தில் அதிரடி அரை சதம் – மும்பை அணியின் வெற்றியைப் பறித்ததோடு வரலாற்றுச் சாதனையும் படைப்பு

0
304
Pat Cummins KKR

2022-ன் ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் பதின்மூன்றாவது போட்டி. மஹாராஷ்ட்ராவின் புனே மைதானத்தில் ரோகித் சர்மாவின் மும்பை அணிக்கும், ஸ்ரேயாஷின் மும்பை அணிக்கும் இடையே அதிரடியாக நடந்து முடிந்துள்ளது!

முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஷ் மும்பையை பேட்டிங் செய்ய அழைத்தார். இந்த ஆட்டத்திலும் உமேஷ் யாதவின் பந்துவீச்சு மிகச்சிறப்பாக அமைந்தது. ரோகித்-இஷான் மந்தமாக விளையாண்டு ஆட்டமிழந்தாலும், குட்டி ஏபிடி பிரிவிஸ் டிவால்ட், சூர்யா, திலக் வர்மா ஆட்டத்திலும், இறுதியில் பொலார்டான் ஐந்து பந்திற்கு 22 ரன் அதிரடியிலும் கெளரவமான 161 ஸ்கோரை எட்டியது.

- Advertisement -

பின்பு 162யை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ரகானே, ஸ்ரேயாஷ், பில்லிங்ஸ், ராணா, ரஸல் ஆகியோர் ஏமாற்றினாலும், ஒருமுனையில் நிலைத்து நின்று ஆடிய வெங்கடெஷ் அரைசதம் அடித்து நம்பிக்கைத் தந்தார்.

ஆனால் ரஸலுக்குப் பிறகு களமிறங்கிய ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் ருத்ரதாண்டவம் ஆடி வெறும் 14 பந்தில் அரைசதமடித்து, கொல்கத்தா அணியை அனாசயமாக வெற்றிப்பெற வைத்துவிட்டார். ஐ.பி.எல் அதிவேக அரைசதம் அடித்த கே.எல்.ராகுலுடன் இணைந்தார்.

ஐ.பி.எல்-ன் அதிவேக அரைசதம் அடித்தவர்:

கே.எல்.ராகுல்- 2018 -டெல்லி-14 பந்துகள்
கம்மின்ஸ்- 2022 – மும்பை – 14 பந்துகள்
யூசுப்பதான்- 2014- ஹைதராபாத்- 15 பந்துகள்
சுனில்நரைன்-2017-பெங்களூர்- 15 பந்துகள்

- Advertisement -
பாட் கம்மின்ஸின் மும்பைக்கு எதிரான கடைசி மூன்று ஆட்டங்கள்:

33 [12]
53* [36]
50* [14]

மும்பை அணி வீரர் டேனியல் சாம்ஸின் ஒரே ஓவரில் 35 ரன்களை குவித்தார். இது ஒரு ஓவரில் எடுக்கப்பட்ட மூன்றாவது அதிகபட்ச ஐ.பி.எல் ரன் ஆகும்!

இன்றைய நாள் பாட் கம்மின்ஸின் நாள்!