இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு பெற்று விளையாடும் சாய் சுதர்ஷன் மோசமான முறையில் ஆட்டம் இழந்து வருவது குறித்து இந்திய முன்னாள் விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் பேசியிருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் விளையாட வாய்ப்பு பெற்ற அவர் மொத்தம் ஒரு அரை சதத்துடன் 142 மட்டுமே எடுத்தார். நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 19 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இந்த நிலையில் சாய் சுதர்சன் அடுத்த இன்னிங்சில் ரன் எடுக்கவில்லை என்றால் படிக்கல் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வாய்ப்புடன் சாய் சுதர்சன் நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் இவரை விட புத்திசாலித்தனமாக விளையாடக்கூடிய திலக் வர்மாவை கொண்டுவர வேண்டும் எனவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் திலக் வர்மா வெளிப்படுத்திய புத்திசாலித்தனமான பேட்டிங் காரணமாக அவருக்கு ஆதரவு அதிகரித்து இருக்கிறது.
இதுகுறித்து பார்த்திவ் படேல் பேசும் பொழுது ” சாய் சுதர்சன் நேற்று நேற்று பதட்டமாகத் தெரிந்தார். பொதுவாகவே அவர் தனது கால்களை பயன்படுத்தி நல்ல முறையில் விளையாடுவார். இடதுகை சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக இடதுகை பேட்ஸ்மேன்கள் எப்பொழுதும் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்ய விரும்புவார்கள். மேலும் தாக்கி விளையாடுவதற்கு சிறப்பான பந்துகள் கிடைக்க காத்திருப்பார்கள்”
இதையும் படிங்க : 2017ல் அவர் செஞ்ச சாதனையை.. 2025ல் அவரே முறியடிப்பார்.. இந்திய வீரரை பாராட்டும் பார்த்தீவ் பட்டேல்
“இந்த இடத்தில் சாய் சுதர்சனுக்கு எது பிரச்சனையாகிறது என்றால், தற்போது அவர் விளையாடி வரும் மூன்றாவது இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு அவருக்கு பெரிய ரன்கள் தேவைப்படுகிறது. இந்த அழுத்தம்தான் அவருக்கு பதட்டத்தை உருவாக்குகிறது. இதன் காரணமாக அவர் தவறான முறையில் விளையாடி அவுட் ஆகிறார்” என்று கூறி இருக்கிறார்.