சச்சினும் கோலியும் உங்க இடத்துலதான் பேட்டிங் செஞ்சாங்க.. அதை மனசுல வச்சுட்டு விளையாடுங்க.. இளம் வீரருக்கு முன்னாள் வீரர் அறிவுரை

0
50

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்திய அணி தடுமாற்றமான நிலையில் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான பார்த்திவ் பட்டேல் இந்த டெஸ்ட் போட்டி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 489 ரன்கள் குவிக்க, அதற்குப் பிறகு விளையாடிய இந்திய அணியில் தொடக்கம் சரியாக இருந்த போதிலும் அதற்கு பின்னால் வந்த வீரர்கள் இதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதிலும் குறிப்பாக விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் களம் இறங்கிய நான்காவது இடத்தில் களம் இறங்கிய விக்கெட் கீப்பர் துருவ் ஜூரேல் ஆட்டத்தின் சூழ்நிலையை உணராமல் மோசமான புல் ஷார்ட் விளையாடி ஆட்டம் இழந்தார்.

11 பந்துகளை அவர் எதிர்கொண்ட நிலையில் மார்க்கோ ஜான்சனின் பந்துவீச்சில் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதற்குப் பிறகு தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ் முடிவில் 201 ரன்கள் எடுத்தது. இதனால் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடி வரும் தென்னாப்பிரிக்க அணி தற்போது விக்கெட் இழப்பின்றி 31 ரன்கள் எடுத்திருக்கும் நிலையில் இந்திய அணியை விட 319 ரன்கள் முன்னேறி உள்ளது.

- Advertisement -

இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் பார்த்தீவ் பட்டேல் கூறும்போது “தேநீர் இடைவேளை நெருங்கவில்லை என்றாலும் ஜூரேல் விளையாடிய இந்த ஷார்ட் சரியாக அடிக்கப்படவில்லை என்று கூறுவேன். அவர் நிறைய ரன்கள் எடுத்திருப்பதால் ஒரு பேட்டராக விளையாடத் தகுதியானவர். இருப்பினும் அவர் இங்கே கட்டுப்பாட்டில் இல்லை, பொதுவாக வலது கை பேட்டர் வலது கை தோள்பட்டைக்கு வெளியே இருக்கும் போது லெக் சைடில் அடிக்க முயற்சி செய்யக் கூடாது. அந்தப் பந்து பெரும்பாலும் காற்றில் சென்றதால் தான் இந்த தவறு நடந்தது.

இதையும் படிங்க:இந்த பையன் மீது ரொம்ப நம்பிக்கை வைத்தேன்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கல.. முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் கருத்து

இரண்டாவதாக நீங்கள் மார்க்கோ ஜான்சனின் பவுன்சர் பந்துவீச்சை எதிர்கொள்ளும் போது கூடுதலாக பவுன்சர் இருக்கும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர் உயரமானவர். நான்காவது இடத்தில் பேட்டிங் செய்ய வரும்போது சச்சின் மற்றும் டெண்டுல்கர் இடத்தில் பேட்டிங் செய்கிறோம் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு முன்னர் கில் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்து நிறைய ரன்கள் எடுத்திருக்கிறார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்” என்று அவர் பேசி இருக்கிறார்.

- Advertisement -