டி20 உலகக்கோப்பையில் இப்போது இருக்கும் இந்த வீரர் இருக்க மாட்டார்! – பார்த்திவ் படேல்

0
519
Parthiv patel

இந்திய வெஸ்ட்இன்டீஸ் சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என வென்றது. அடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் நேற்று பிரையன் லாரா மைதானத்தில் நேற்று வெஸ்ட்இன்டீஸ் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடியது!

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் பிரதான ஸ்பின்னராக இருந்து வரும் யுஸ்வேந்திர சாஹல் இடம்பெறவில்லை. அவருக்கு ஓய்வளிக்கப்பட்டதோடு, புதிய சுழற்கூட்டணியைப் பரிசோதித்தது ரோகித்-ராகுவ்டிராவிட் கூட்டணி.

- Advertisement -

இந்த ஆட்டத்தில் ஆப்-ஸ்பின்னர் அஷ்வினும், லெக்-ஸ்பின்னர் ரவி பிஷ்னோயும் கூட்டணி அமைத்தார்கள். இவர்களோடு இடக்கை சுழலர் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் இடம் பெற்றார். இந்தியாவிற்கு வெளியே இப்படி மூன்று ஸ்பின்னர்கள் அதுவும் டி20 போட்டியில் இந்திய அணியில் இடம்பெறுவது ஆச்சரியமான விசயம்தான்!

மேலும் புதிய சுழற்கூட்டணியை அமைத்ததோடு பவர்-ப்ளேவில் ரவீந்திர ஜடேஜாவும், ஆர்.அஷ்வினும் பந்துவீச வைக்கப்பட்டார்கள். மேலும் ஆட்டத்தின் இறுதிக்கட்ட ஓவர்களில் ரவி பிஷ்னோய் வீசினார். இவர்கள் மொத்தம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு, வெஸ்ட் இன்டீஸ் அணியின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியை எளிதாக்கினார்கள்!

இந்திய அணி நிர்வாகத்தின் இந்த புதிய அணுகுமுறை, தந்திரோபாயத்தைப் பற்றி இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பார்த்திப் படேல் சில முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டதோடு, வருகின்ற டி20 உலகக்கோப்பைக்கு எப்படியான இந்திய அணி அமைக்கப்படலாம் என்றும் தெரிவித்தார்.

- Advertisement -

இது சம்பந்தமாக பார்த்திவ் படேல் கூறுகையில் “ரோகித் வெவ்வேறு நேரங்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் பந்துவீசுவதை உறுதி செய்தார். ரவி பிஷ்னோய் இறுதிக்கட்ட ஓவர்களில் பந்துவீசுவதைப் பார்த்தோம். அஷ்வினும் ஜடேஜாவும் பவர்-ப்ளேவில் பந்துவீசினார்கள். அஷ்வின் இப்படி வீசுவது புதிதல்ல. ஆனால் ஜடேஜா பவர்-ப்ளேவில் வீசுவது புதிது. இரண்டு வலக்கை பேட்ஸ்மேன்களுக்காக ஜடேஜா வரவழைக்கப்பட்டார். ரோகித் சர்மாவின் கேப்டன்சி சிறப்பாக இருந்தது” என்றார்.

மேலும் பேசியே பார்த்திவ் படேல் “இந்தியா இரண்டு ஸ்பின்னர்களோடு போவதாய் இருந்தால் அடுத்த ஆட்டத்தில் ரவி பிஷ்னோய்தான் இருப்பார். அஷ்வின் இருக்கமாட்டார். அஷ்வின் டி20 உலகக்கோப்பையில் இருப்பாரென்று நான் பார்க்கவில்லை. உண்மையைச் சொல்வதென்றால் வெரைட்டியையும் அட்டாக்கிங் ஆப்சனையும் சாஹல், குல்தீப், பிஷ்னோய் கூட்டணிதான் தருகிறது. அஷ்வின் உங்களுக்கு இதைத் தரவில்லை” என்றும் தெரிவித்திருக்கிறார்!