ரோகித் மீது பாகிஸ்தான் வீரர் குற்றச்சாட்டு.. வாசிம் அக்ரம் இர்பான் பதான் தரமான பதிலடி!

0
1203
Irfan

நடப்பு 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்று இறுதிப்போட்டிக்குள் முதல் அணியாக நுழைந்திருக்கிறது.

இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் எல்லா துறைகளும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இந்திய அணியின் குழு மிக அபாரமாகச் செயல்பட்டு வருகிறது.

- Advertisement -

மேலும் மிக முக்கியமாக இந்திய அணியின் வீரர்களுக்குள் நல்ல நட்பும் உறவும் இருக்கிறது. வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் நல்ல முறையில் ஆதரிக்கக் கூடியவர்களாகவும் உதவி செய்யக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.

அணி வீரர்களிடையே நிலவும் இந்த சமூக நிலைமையின் காரணமாக களத்தில் ஒரே அணியாக கூட்டுச் செயல்பாடு பிரமாதமாக இருக்கிறது. அணியின் சூழல் நன்றாக இருக்கின்ற காரணத்தினால் திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படுகிறது. இதனால் அணியின் நம்பிக்கையும் தைரியமும் அதிகரித்து இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக இப்படியான காரணிகளால் இந்திய அணி அபாரமான முறையில் எதிரணிகளை முடக்கி வெற்றி பெற்று வருகிறது. இந்திய அணியின் இந்த எழுச்சிமிகு வெற்றிகளை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக அவர்கள் அடிப்படை இல்லாத குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள்.

- Advertisement -

இன்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சிக்கந்தர் பக்த் ரோகித் சர்மா வேண்டுமென்றே டாஸ் போடப்படும் பொழுது நாணயத்தை தூரமாக வீசுகிறார் என்றும், இதனால் எதிரணி கேப்டன் என்ன விழுந்து இருக்கிறது என்று பார்க்க முடியவில்லை என்றோம், இதன் மூலம் ஒரு சதி நடக்கிறது என்று பரபரப்பான குற்றச்சாட்டை கூறியிருந்தார்.

இந்த நிலையில் இதற்கு பதிலடி தந்து பேசி உள்ள பாகிஸ்தான் முன்னாள் நட்சத்திர வீரர் வாசிம் அக்ரம் ” டாஸ் போடப்படும் பொழுது நாணயத்தை எந்த இடத்தில் சுண்ட வேண்டும் என்கின்ற எந்த விதியும் கிடையாது. மேலும் அந்த இடத்தில்தான் ஸ்பான்சர்ஷிப் போர்டு இருக்கிறது. இப்படியான கருத்துக்களை நான் மிக சங்கட்டமாக உணர்கிறேன்!” என்று வேதனையாக கூறியிருக்கிறார்!

இதுகுறித்து பதிலடி தந்துள்ள இர்ஃபான் பதான் கூறும்பொழுது “இந்திய கிரிக்கெட்டை குற்றம் சாட்டினால் பிரபலம் அடையலாம் என்று செய்கிறார்கள். இது போன்ற குற்றச்சாட்டுகள் ஆதாரம் அற்றவை மற்றும் இந்தியாவின் நல்ல பெயரை குறைக்கும் நோக்கத்துடன் செய்யப்படுபவை என்பது கவனிக்கத்தக்கது!” என்று கோபமாக கூறியிருக்கிறார்!