303 ரன்.. பாபர் இடத்தில் கம்ரன் குலாம் அசத்தல்.. ஜிம்பாப்வேவை வென்று பாகிஸ்தான் தொடரை கைப்பற்றியது

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 எனக் கைப்பற்றி இருக்கிறது.

- Advertisement -

தற்போது பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் வென்று தொடர் சமநிலையில் இருந்தது.

பாபர் இடத்தில் கம்ரான் குலாம் மீண்டும் அசத்தல்

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான அணி முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தது. தணிக்கை தொடக்க ஆட்டக்காரர்கள் சையும் அயூப் 37 பந்துகளில் 31 ரன்கள், அப்துல்லா ஷபிக் 68 பந்தில் 50 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை ஏற்படுத்தி தந்தார்கள்.

இதைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் பாபர் அசாமுக்கு பதிலாக வந்த கம்ரான் குலாம் 99 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 103 ரன்கள் குவித்தார். கடைசியில் ஆகா சல்மான் 26 பந்தில் 30 ரன்கள், டையாப் தாஹிர் 16 பந்தில் 29* ரன்கள் எடுத்தார்கள். 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் குவித்தது. பந்துவீச்சில் சிக்கந்தர் ராஸா மற்றும் நகர்வா தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

பாகிஸ்தான் தொடரை வென்றது

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் கும்பி 9 பந்தில் 5 ரன்கள், மருமாணி 30 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். அதிகபட்சமாக கேப்டன் கிரேஜ் எர்வின் 63 பந்தில் 51 ரன்கள், பிரையன் பென்னெட் 27 பந்தில் 37 ரன்கள் எடுத்தார்கள். நட்சத்திர வீரர் சிக்கந்தர் ராஸா 25 பந்தில் 16 ரன் மட்டும் எடுத்து ஏமாற்றம் தந்தார்.

இதையும் படிங்க : இந்தியா ஜெயிக்கும்னு நினைக்கல.. எங்க நாடு அவங்களுக்கு ஹோம் மாதிரி இதனால ஆயிடுச்சு – ரிக்கி பாண்டிங் பேச்சு

இறுதியாக ஜிம்பாப்வே அணி 40.1 ஓவரில் 204 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் சையும் அயூப், அப்ரார் அஹமத், அமீர் ஜமால் மற்றும் ஹாரிஸ் ரவுப் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள். பாகிஸ்தான் அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்ற பிறகு, இது இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் தொடர் வெற்றியாகும்.

- Advertisement -
Published by

Recent Posts