வெறும் 66 ரன்.. அதிரடியாக சாம்பியன் பட்டம்.. திடீர் விஸ்வரூபம் எடுக்கும் பாகிஸ்தான் அணி.. ஆசிய கோப்பையை வெல்லுமா?

0
85
Pakistan

நேற்று முத்தரப்பு டி20 தொடரின் இறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை சுருட்டி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஆசியக் கோப்பைத் தொடருக்கு முன்பாக யுஏஇல் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மற்றும் யுஏஇ அணிகள் விளையாடிய முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்றது. லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய 2 போட்டிகளில் இரு அணியும் ஒரு போட்டியை வென்றனர். நேற்று இந்தத் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது.

- Advertisement -

பாகிஸ்தானின் தைரிய முடிவு

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் தைரியமாக முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தது. ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. அதிகபட்சமாக பகார் ஜமான் 27 ரன், முகமது நவாஸ் 25 ரன் எடுத்தார்கள். பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. ரஷித் கான் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி அதிர்ச்சி அளிக்கும் விதமாக வெறும் 66 ரன்னில் சுருண்டது. பாகிஸ்தான் அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியில் சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் முகமது நவாஸ் ஐந்து விக்கெட், மற்ற இரண்டு ஸ்பின்னர்ர்களான அப்ரார் அஹ்மத் மற்றும் சுபியான் முகீம் இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

அதிகரித்த பாகிஸ்தான் பலம்

தற்போது பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனில் பிரதான சுழல் பந்துவீச்சாளர்களாக அப்ரார் அகமத், சுபியான் முகீம் மற்றும் முகமது நவாஸ் என மூன்று பேர் இடம் பெற முடிகிறது. மேலும் தொடக்க ஆட்டக்காரர் சையும் அயூப் கேரம் பால் வீசக்கூடிய அளவில் தரமான பார்ட் டைம் ஸ்பின்னராக இருக்கிறார். எனவே பாகிஸ்தான் அணி நான்கு ஸ்பின்னர்களை இறக்கி விளையாட முடிவது பலத்தை அதிகரிக்க செய்கிறது. இதில் இரண்டு பேர் ஆல்ரவுண்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பும்ரா இல்லை.. ஆசிய கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தும் வீரர் இவர்தான்.. முன்னாள் கிரிக்கெட்டர் தினேஷ் கார்த்திக் கணிப்பு

மேலும் ஷாகின் அப்ரிடி மற்றும் பாஹிம் அஷ்ரப் என இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து மட்டுமே விளையாடுகிறார்கள். இதில் பாஹிம் அஷ்ரப் ஆல்ரவுண்டர் மற்றும் ஷாகின் அப்ரிடியால் பேட்டிங் செய்ய முடியும். இதன் காரணமாக பாகிஸ்தான் பேட்டிங் வரிசை ஒன்பது வரையில் நீள்கிறது. இதனால் தற்போது பாகிஸ்தான் டி20 அணியின் பலம் அதிகரித்திருக்கிறது. மேலும் ஆசியக் கோப்பையில் மற்ற அணிகளுக்கு கடுமையான சவாலை கொடுக்க தயாராகி இருக்கிறது.

- Advertisement -