13 ஓவர்.. பட்டையை கிளப்பிய பாகிஸ்தான்.. 2026யை சோகமாக முடித்த இலங்கை – முழு விபரங்கள்

0
0

இன்று இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை பாகிஸ்தான் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்று, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 எனக் கைப்பற்றி இருக்கிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி பாகிஸ்தானின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெறும் 98 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. இதைத்தொடர்ந்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி 325 ரன்கள் எடுத்து 227 ரன்கள் முன்னிலை பெற்றது.

- Advertisement -

இதை அடுத்து பின்தங்கிய நிலையில் விளையாடிய இலங்கை அணி 316 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு 90 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

சிறிய இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி வெறும் 13 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை வென்றது. மேலும் இலங்கை அணி 2026 ஆம் ஆண்டில் ஆறு டெஸ்ட் போட்டிகளை விளையாடி ஒரு டெஸ்ட் போட்டியை கூட வெல்லாமல் இந்த ஆண்டை முடித்திருக்கிறது.

- Advertisement -
- Advertisement -