உலக கிரிக்கெட்

806 நாள்கள் 84 இன்னிங்ஸ்.. பாபர் அசாமின் சோகம் தீர்ந்தது.. இலங்கை மீண்டும் தோல்வி.. பாகிஸ்தான் தொடரை வென்றது

பாகிஸ்தான் அணி தங்களது சொந்த மண்ணில் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி இருக்கிறது.

- Advertisement -

தற்போது இலங்கை அணி வெள்ளை பந்து தொடர்களில் விளையாடுவதற்கு பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில், முதல் போட்டியில் பாகிஸ்தான அணி வெற்றி பெற்று இருந்தது. இந்த நிலையில் இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

தடுமாறி நிமிர்ந்த இலங்கை

முதலில் பேட்டிங் செய்ய வந்த இலங்கை அணி பதும் நிஷங்கா 24, கமில் மிஸ்ரா 27, குசால் மெண்டி 20, விக்கிரமசிங்கே 42, கேப்டன் அசலங்கா 6 ரன்கள் என எடுத்து வெளியேற இலங்கை அணி நெருக்கடியில் சிக்கியது. எனது 250 ரன் எடுப்பதற்குள் ஆல் அவுட் ஆகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் கடைசி கட்டத்தில் ஜனித் லியாங்கே 63 பந்தில் 54 ரன்கள், கமிந்து மெண்டிஸ் 38 பந்தில் 44 ரன்கள், வனிந்து ஹசரங்கா 26 பந்தில் 37 ரன் எடுத்தார்கள். இதனால் இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் பந்துவீச்சில் அப்ரார் அகமது மற்றும் ஹாரிஸ் ரவுப் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

பாபர் அசாம் சோகம் தீர்ந்தது

இதை தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சைம் அயூப் 25 பந்தில் 33 ரன்கள், பகார் ஜமால் 93 பந்தில் 78 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தார்கள். நான்காவது இடத்தில் வந்த முகமது ரிஸ்வான் ஆட்டம் இழக்காமல் 54 பந்தில் 51 ரன் எடுத்தார்கள்.

இதையும் படிங்க : சாம்சன் சிஎஸ்கே வந்தா.. 2 வழியில் சென்னை அணி பயன் பெறும்.. அடுத்த ஐபிஎல் மாஸா வருவாங்க – புஜாரா கருத்து

இன்னொரு முனையில் நின்ற பாபர் அசாம் ஆட்டம் இழக்காமல் இறுதிவரை நின்று சதம் அடித்து 119 பந்துகளில் 8 பவுண்டரிகள் உடன் 102 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் அணி 48.2 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாபர் அசாம் 84 சர்வதேச இன்னிங்ஸ் மற்றும் 806 நாட்கள் கழித்து சர்வதேச சதம் அடித்து, சத வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

- Advertisement -
Published by