சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிரேடிங் முறையில் ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கொடுத்து அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை தங்கள் பக்கம் இழுத்து இருக்கிறது.
இதன் மூலமாக சென்னை அணி இரண்டு விதங்களில் பயனடையும் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சேத்தேஸ்வர் புஜாரா கூறியிருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங் வலுவில்லாமல் பல போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து வெளியேறியது. இருப்பினும் அப்போது கேப்டனாக இருந்த தோனி அணியின் நிலைமையை புரிந்து கொண்டு தரமான அதிரடியான வீரர்களை உடனே அணிக்குள் இழுத்து ஓரளவு வலுப்படுத்தினார். ஆல் ரவுண்டர்கள் அதிகம் இருந்தாலும் அதிரடியான பேட்டிங் இல்லாமல் சென்னை அணி தவித்தது.
இந்த சூழ்நிலையில் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் அணிக்கு கொடுத்து அந்த அணியின் சஞ்சு சாம்சனை கொண்டு வந்திருப்பதாக கடந்த சில தினங்களாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் அதிகாரப்பூர்வ கிரிக்கெட் வலைதளங்கள் மூலமாக அது நேற்று உறுதி செய்யப்பட்டது. அதனால் இன்று அதிகாரப்பூர்வமாக சாம்சன் சென்னை அணியில் இணைகிறார் என்று தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம். இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான புஜாரா சிஎஸ்கே இதன் மூலமாக இரண்டு விதங்களில் பயனடையும் என்று கூறி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்த வர்த்தகத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு விதங்களில் பயனடைகிறது. ஒன்று அவர்களின் டாப் வரிசை பேட்டிங் கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படவில்லை. சஞ்சு டாப் ஆர்டரில் வந்தால் அவர்கள் அதிக நிலைத்தன்மை பெறுவார்கள். இரண்டாவதாக ஆகாஷ் சோப்ரா பேசியது அவர்கள் எதிர்காலத்தை பற்றி சிந்திக்கிறார்கள்.
இதையும் படிங்க:என்ன கம்பீர் இது.. வெறும் 27 ஓவருக்கே இப்படியா?. ODI கிரிக்கெட்ல கூட இதை யாருமே செய்யல – ஆகாஷ் சோப்ரா
மகிபாய் எப்போது வெளியேறுவார் என்று எங்களுக்கு தெரியாது. ஆனால் மஹி பாய்க்கு பிறகு சென்னை அணிக்கு தேவையான நீண்டகால விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சன் மூலமாக பூர்த்தி செய்ய முடியும்” என்று உணர்வதாக அவர் பேசியிருக்கிறார். இருப்பினும் சஞ்சு சென்னை அணிக்கு வந்தாலும் கேப்டனாக ருத்ராஜ் தொடர்வார் என்று புஜாரா பேசி இருக்கிறார்






