“ஆஸ்திரேலியாகிட்ட மோத பாகிஸ்தான் அணி சரிவராது.. இவங்களால மட்டும்தான் முடியும்!” – வாகன் பரபரப்பு பேச்சு!

0
1190
Vaughan

ஆஸ்திரேலியா தற்பொழுது உள்நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஆசஸ் டெஸ்ட் தொடரை விளையாடி இருந்தது.

- Advertisement -

இதில் இரண்டு வெற்றி மற்றும் இரண்டு தோல்வி ஒரு டிரா என அந்த அணி முடித்திருந்தது. மேலும் குறித்த நேரத்தில் ஓவர்கள் வீசாததால் சில புள்ளிகளும் குறைக்கப்பட்டன. இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு அந்தத் தொடர் பின்னடைவாகவே அமைந்தது.

இதன் காரணமாக உள்நாட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட தொடரை மொத்தமாக வெல்வது அந்த அணிக்கு மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில், 360 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியிருக்கிறது.

- Advertisement -

மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணியை இரண்டாவது இடத்திற்கு கீழே இறக்கி, இரண்டாவது இடத்தில் இருந்த இந்திய அணியை முதல் இடத்திற்கு அனுப்பி இருக்கிறது.

ஆஸ்திரேலியா அணி 2021 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கான உலகக் கோப்பைகளையும் வென்று அசத்தியிருக்கிறது. இரு நாடுகளுக்கு இடையேயான தொடர்களில், ஆஸ்திரேலியா சுமாராக செயல்பட்டாலும் கூட, உலகக் கோப்பை மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் செயல்பாடு அசுரத்தனமாக இருந்து வருகிறது.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அபார வெற்றி பெற்ற பிறகு இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறும்பொழுது “ஆஸ்திரேலியா அணி மிகவும் சரியாக பொருந்திய திறமை கொண்ட அணி. ஒரு அணிக்கு என்ன தேவையோ அத்தனையையும் அவர்கள் வைத்திருக்கிறார்கள்.

நாதன் லயன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியது அபாரமான ஒரு செயல்பாடு. தற்போதைய ஆஸ்திரேலியா அணியுடன் மோதுவதற்கான எல்லா ஆயுதங்களையும் வைத்திருக்கும் ஒரே அணி இந்திய அணி மட்டும்தான்!” என்று கூறி இருக்கிறார்!