உலக கிரிக்கெட்

பாகிஸ்தான் பிளேயர்ஸ் மேட்ச் பிக்சிங் பண்றோமா?.. எங்க டார்கெட் அதுதான் – ஷான் மசூத் பேட்டி

பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பை தொடருக்கு அடுத்து முதல் சர்வதேச தொடரில் உள்நாட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடருக்கு முன்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டன் ஷான் மசூத் பல முக்கிய விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

தற்போது பாகிஸ்தான் வெள்ளைப் பந்து அணிகளுக்கு பாபர் அசாம் கேப்டனாக இருக்கிறார். அதே சமயத்தில் கடந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் சுற்றுப்பயணம் முதல் பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷான் மசூத் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் கிரிக்கெட் வடிவத்திற்கு தென் ஆப்பிரிக்காவின் கேரி கிரிஸ்டின் மற்றும் பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் ஜேசன் கில்லஸ்பி ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஷான் மசூத் பத்திரிகையாளர்களை எதிர்கொண்ட பொழுது, பாகிஸ்தான் சிறப்பாக விளையாடதற்கு காரணம் பாகிஸ்தான் வீரர்கள் மேட்ச் பிக்சிங் என்று பரபரப்பான கேள்வி முன் வைக்கப்பட்டது. சிக்கலான இந்த கேள்விக்கு ஷான் மசூத் மிகவும் நிதானமான முறையில் பதில் அளித்து இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து ஷான் மசூத் “நீங்கள் மேட்ச் பிக்சிங் வார்த்தையை பயன்படுத்தி கேள்வி கேட்டது போல, என்னால் வீரர்களிடம் அவர்களின் நோக்கம் குறித்து எந்த கேள்வியையும் கேட்க முடியாது. தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பில் வீரர்களின் நேர்மை குறித்து யாரும் இப்படி கேட்க முடியாது. இது எனக்கு உடன்பாடு இல்லாத ஒன்று.

தற்போது உலகக்கோப்பை நம்மை விட்டு கடந்து விட்டது. எங்கள் வீரர்கள் அனைவரும் பாகிஸ்தான் நாட்டிற்காக வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று என்னால் உத்திரவாதம் அளிக்க முடியும். அதே சமயத்தில் வெற்றியும் தோல்வியும் வர செய்கின்றன. ஆனால் நாங்கள் தோல்வியடையும் பொழுது உண்மையான வருத்தத்தில் இருக்கிறோம்.

இதையும் படிங்க : ஐபிஎல் முதலாளிகளை.. மற்ற நாட்டு கிரிக்கெட் லீக்குகளில் விடாதிங்க.. காரணம் இதுதான் – இயான் சேப்பல் கருத்து

ஒலிம்பிக்கில் தங்கம் வென்று அர்ஷத் நதிம் தேசிய வீரராக உயர்ந்திருக்கிறார். நாங்கள் வெற்றி பெறுவதற்கான உத்வேகத்தை அவரிடம் இருந்து எடுத்துக் கொள்வோம். பாகிஸ்தானை பெருமைப்படுத்தும் விதமாக நாங்கள் வெற்றிகள் பெற வேண்டும் என்று விரும்புகிறோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by