2025 தங்கள் நாட்டில் நடக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் வெல்லும் எனவும் அதற்கான பலம் அந்த அணிக்கு இருப்பதாகவும் அந்த அணியின் துணை கேப்டன் சல்மான் அலி ஆகா கூறியிருக்கிறார்.
இந்த முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. அதே சமயத்தில் இந்திய அணி பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்லவில்லை. எனவே இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்பியன்ஸ் டிராபி தயாரிப்பின் திருப்பம்
இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் இல்லாமல், முதல் அரையிறுதி போட்டி துபாயில் நடக்கிறது. மேலும் இந்திய அணி அரையிறுதியில் வெற்றி பெறும் என்றால், இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் பட்சத்தில் அந்தப் போட்டி துபாய் மைதானத்தில் நடைபெறும்.
அதே சமயத்தில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை என்றால், இறுதிப்போட்டி பாகிஸ்தானின் லாகூர் மைதானத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்திய அணியின் செயல்பாட்டை பொறுத்து இறுதிப்போட்டி எங்கு நடைபெறும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
லாகூரில் கோப்பையை உயர்த்த வேண்டும்
சாம்பியன்ஸ் டிராபி தொடர் குறித்து சல்மான் அலி ஆகா கூறும் பொழுது “பாகிஸ்தான் ஐசிசி நிகழ்வை நடத்துவது சிறப்பு என்கின்ற காரணத்தினால் நான் சாம்பியன்ஸ் டிராபி குறித்து மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இறுதிப் போட்டியில் எனது சொந்த ஊரான லாகூரில் கோப்பையை உயர்த்துவது எனக்கு மிகப்பெரிய கனவாக இருக்கிறது. மேலும் இந்த கோப்பையை பாகிஸ்தான் அணி வெல்லும், அதற்கான திறன் எங்களிடம் இருக்கிறது”
இதையும் படிங்க : உண்மைய சொல்றேன்.. எங்க வாசிம் அக்ரமை விட ரஷீத் கான் பெரிய வீரர்.. காரணம் இதான் – ரஷீத் லத்திப் பேட்டி
“இந்தியா பாகிஸ்தான் அணி மோதிக் கொள்ளும் போட்டியில் சூழ்நிலை மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். இந்திய தரப்பில் இந்த போட்டி மிகவும் பெரிய போட்டி என்று கூறுகிறார்கள். அவர்கள் சொல்வது உண்மைதான் இது மிகப்பெரிய போட்டி. ஆனாலும் இந்தத் தொடரில் மற்ற போட்டிகள் போல இதுவும் ஒரு போட்டிதான். எனவே இந்திய அணிக்கு எதிரான போட்டியை விட சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெல்வது முக்கியமானது” என்று கூறியிருக்கிறார்.






