இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி பாகிஸ்தான் முன்னேற்றம் – வெளியானது புதிய ஐசிசி ஓடிஐ தரவரிசை

0
102
India and Pakistan Cricket Team

தற்போது ஒருநாள் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. இதில் பல மாறுதல்களும், சில அணிகளின் சிறப்பான செயல்பாடுகளோடு, சில பெரிய அணிகளின் பலகீனங்களும் வெளியே வந்துள்ளது.

கடந்த 8ஆம் தேதி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில், முல்தான் மைதானத்தில் பாகிஸ்தானோடு வெஸ்ட்இன்டீஸ் அணி விளையாடியது. இந்தத் தொடரின் கடைசிப் போட்டி நேற்று நடந்தது. மூன்று போட்டிகளிலும் வெஸ்ட் இன்டீசை வீழ்த்தி வொய்ட் வாஷ் செய்தது பாகிஸ்தான் அணி.

- Advertisement -

இந்தத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னால் பாகிஸ்தான் அணி 104 புள்ளிகளோடு இருந்தது. இந்திய அணி 105 புள்ளிகளோடு இருந்தது. இந்தத் தொடரில் 3-0 என ஜெயித்ததால், பாகிஸ்தான் அணி இந்திய அணியைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறி இருக்கிறது. இதன் மூலம் 2013ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் 50 உலகக்கோப்பையில் இடம் பெறுவதற்கான தகுதியை நெருங்கி இருக்கிறது பாகிஸ்தான் அணி.

ஐ.சி.சி வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டி அணிகளின் தரவரிசை பட்டியல் :

நியூசிலாந்து அணி 125 புள்ளிகளோடு முதல் இடத்தில் இருக்கிறது.

இங்கிலாந்து அணி 124 புள்ளிகள் இரண்டாம் இடம்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணி 107 புள்ளிகள் மூன்றாம் இடம்.

பாகிஸ்தான் அணி 106 புள்ளிகள் நான்காம் இடம்.

இந்திய அணி 105 புள்ளிகள் ஐந்தாம் இடம்.

தென் ஆப்பிரிக்கா அணி 99 புள்ளிகள் ஆறாம் இடம்.

பங்களாதேஷ் அணி 95 புள்ளிகள் ஏழாவது இடம்.

இலங்கை அணி 87 புள்ளிகள் எட்டாவது இடம்.

வெஸ்ட் இன்டீஸ் அணி 72 புள்ளிகள் ஒன்பதாவது இடம்.

ஆப்கானிஸ்தான் அணி 69 புள்ளிகள் பத்தாவது இடம்.

50 ஓவர் உலகக்கோப்பை பத்து அணிகளை மட்டுமே வைத்து 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடத்தப்பட்டது. அடுத்து 2013ஆம் ஆண்டு இந்தியாவில் நடத்தப்படும் உலகக்கோப்பையிலும் தரவரிசை பட்டியலில் முதல் பத்து இடங்களில் தொடரும் அணிகள் மட்டுமே தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது!