இலங்கைக்கு எதிரான வரும் ஜனவரி மாத டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷாகித் அபிரிடி போன்ற வீரர்கள் இடம்பெறாத நிலையில், ஷதாப் கான் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். அதேவேளையில், சர்வதேச அறிமுகம் பெறாத விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான காஜா நாஃபேக்கு முதல் முறையாக பாகிஸ்தான் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சல்மான் ஆகா தலைமையில் களமிறங்கும் இந்த அணி, பிப்ரவரி, மார்ச்சில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு முன் ஆடும் கடைசித் தொடர் இது. ஆஸ்திரேலியாவில் பிபிஎல் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாடி வரும் ஷதாப் கான், கடந்த ஜூன் மாதமே வங்கதேசத்திற்கு எதிரான உள்நாட்டு டி20 தொடரில் கடைசியாக களமிறங்கினார்.
அந்த தொடரை பாகிஸ்தான் 3-0 என வென்றது; அதில் அவர் 4 விக்கெட்டுகளையும் 55 ரன்களையும் எடுத்தார். காயத்திலிருந்து மீண்ட அவர், டிசம்பர் 16 அன்று பிபிஎல் தொடரில் தான் அவர் போட்டி கிரிக்கெட்டுக்குத் திரும்பினார். 23 வயதான காஜா நாஃபே, சமீபத்தில் அபுதாபி டி10 தொடரில் விளையாடியவர். பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணியிலும் இவர் இடம்பிடித்திருந்தார்.
இதுவரை 32 டி20 போட்டிகளில் 688 ரன்கள் எடுத்துள்ள நாஃபே, 132.81 ஸ்ட்ரைக் ரேட் கொண்டுள்ளார்.
பிபிஎல் தொடரில் பங்கேற்கும் ஷாஹீன் ஷா அப்ரிடி, பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஹாரிஸ் ரவுப், ஹசன் அலி போன்ற முன்னணி பாகிஸ்தான் வீரர்கள் பெரும்பாலும் இந்தத் தொடரில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், நடப்பு வங்கதேச பிரீமியர் லீக் தொடரில் விளையாடி வரும் நாஃபே, அப்ரார் அகமது, முகமது நவாஸ், சாஹிப்சாதா ஃபர்ஹான், உஸ்மான் கான் ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இலங்கைத் தொடர் பிபிஎல் உடன் ஒரே நேரத்தில் நடப்பதால், இவர்கள் தங்கள் பிபிஎல் அணிகளிலிருந்து விலகி பாகிஸ்தான் அணியுடன் இணைவார்கள்.
இந்த தொடர், உலகக் கோப்பைக்கு முன்னதாக அணியை இறுதி செய்ய இந்தத் தொடர் பாகிஸ்தானுக்கு ஒரு வாய்ப்பளிக்கும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது.உலகக் கோப்பைக்கு முன்பு, ஜனவரி இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மூன்று உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இதையும் படிங்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்.. ஆஸ்திரேலிய அணி புள்ளிகள் சரிவு.. இங்கிலாந்து வெற்றி
இலங்கை டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி: சல்மான் ஆகா (கேப்டன்), அப்துல் சமத், அப்ரார் அகமது, ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகர் ஜமான், காஜா நாஃபே (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், சல்மான் மிர்சா, முகமது வாசிம், நசீம் ஷா, சாஹிப்சாதா ஃபர்ஹான் (விக்கெட் கீப்பர்), சயிம் அய்யூப், ஷதாப் கான், உஸ்மான் கான் (விக்கெட் கீப்பர்), உஸ்மான் தாரிக்.