பாகிஸ்தானை பந்தாடிய, இங்கிலாந்து ஓபனிங் ஜோடி.. அதிவேக 100, 200!

0
9054

பாகிஸ்தானுக்கு எதிரான எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் துவக்க ஜோடி புதிய சாதனை படைத்திருக்கிறது.

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது.

- Advertisement -

துவக்க வீரர்கள் ஜாக் கிராலி மற்றும் பென் டக்கெட் இருவரும் முதல் ஓவரில் இருந்து அதிரடியை வெளிப்படுத்த துவங்கினர். நசீம் ஷா வீசிய போட்டியின் முதல் ஓவரில் மூன்று பவுண்டர்களை ஜாக் கிராலி அடித்தார். அதிலிருந்து நிறுத்தவே இல்லை.

38 பந்துகளில் அரைசதம் அடித்தார். 86 பந்துகளில் சதம் விலாசி, பாகிஸ்தான் அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சிகளை கொடுக்க, பவுலர்கள் திணறினர்.

டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக, அதிவேகமாக 100 ரன்களை சேர்த்த துவக்க ஜோடி என்ற சாதனையை இந்த ஓப்பனிங் ஜோடி நிகழ்த்தியுள்ளது. இவர்கள் 13.5 ஓவர்களில் 100 ரன்கள் கடந்தனர்.

- Advertisement -

மற்றொரு துவக்க வீரர் பென் டக்கட், இங்கிலாந்து அணிக்காக கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறார். மீண்டும் வந்த முதல் போட்டியிலேயே தனது இரண்டாவது அரைசதத்தை பதிவு செய்தார்.

இந்த துவக்க ஜோடி இத்துடன் நிற்கவில்லை. பாகிஸ்தான் அணிக்கு தொடர்ந்து தொல்லையாக இருந்துகொண்டு, பவுண்டரிகளாக அடித்து வந்தனர். முதல் விக்கெட்டிற்கு 200 ரன்கள் கடந்தும் விளையாடினர்.

35.4 ஓவர்களில் 233 ரன்கள் அடித்திருந்தபோது ஜாக் கிராலி ஆட்டமிழந்தார். இவர் 111 பந்துகளில் 21 பவுண்டரிகள் உட்பட 122 ரன்கள் அடித்திருந்தார். அடுத்த ஓவரில் மற்றொரு துவக்க வீரர் பென் டக்கட் சதம் அடித்த பிறகு, 110 பந்துகளில் 15 பவுண்டரிகள் உட்பட 107 ரன்களுக்கு அவுட்டானார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிவேகமாக 100 ரன்கள் மற்றும் 200 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை இந்த ஓபனிங் ஜோடி அடித்திருக்கிறது. இப்போட்டியில் மட்டும் இந்த ஜோடி 17 ரெக்கார்டுகள் நிகழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக வந்த ஆலி போப், அதே அதிரடியை தொடர்ந்தார். இவர் 54 பந்துகளில் அரைசதம் அடித்தார். முதல் நாள் ஆட்டத்தில், 61 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 381 ரன்கள் எடுத்திருக்கிறது இங்கிலாந்து அணி. களத்தில் ஆலி போப் 82 ரன்களுடனும், ஹாரி புரூக் 37 ரன்கள்டனும் இருக்கின்றனர்.

ஷாஹித் மஹ்மூத் 2 விக்கெட்டுகள் மற்றும் ஹாரிஸ் ரவூப் 1 விக்கெட் வீழ்த்தியிருந்தனர். இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிகள் போல அல்லாமல், ஒருநாள் போட்டியை போல விளையாடி வருவது பாகிஸ்தான் பவுலர்களுக்கு பெரும் சிக்கலாக உள்ளது.