“பாகிஸ்தான் ஆவரேஜ் டீம்.. உ.கோ செமி பைனல் வரது இந்த 4 டீம்தான்!” – ஹர்பஜன் சிங் அதிரடி கணிப்பு!

0
1381
Harbhajan

13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர், கிரிக்கெட் ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்போடு வருகின்ற ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி துவங்கி, நவம்பர் மாதம் 19ஆம் தேதி வரையில் இந்தியாவில் நடைபெற இருக்கிறது!

இந்த முறை நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர், மற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களை விட சற்று வித்தியாசமானதாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

ஏனென்றால் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் போது டி20 கிரிக்கெட் வடிவத்திற்கு இருந்த வரவேற்பு, கடந்த நான்கு வருடங்களில் மிக அதிகமாக தற்பொழுது அதிகரித்திருக்கிறது.

ஐபிஎல் தொடர் தற்போது பெற்றுக் கொண்டிருக்கும் பெரிய வெற்றிகள், டி20 கிரிக்கெட் எந்த அளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தக் கூடியதாக அமைந்திருக்கிறது.

மேலும் இந்தியாவைப் பொறுத்தவரை எடுத்துக்கொண்டால், பல மாநில கிரிக்கெட் சங்கங்கள் தனியாக டி20 தொடர்கள் நடத்த ஆரம்பித்து இருக்கின்றன. இந்த வருடம் இப்படியான இரண்டு மூன்று டி20 லீக்குகள் புதிதாக துவங்கப்பட்டன.

- Advertisement -

மேலும் உலகளவில் எடுத்துக் கொண்டால் அமெரிக்கா இந்த முறை மேஜர் லீக் கிரிக்கெட் என்ற பெயரில் ஆறு அணிகளை கொண்டு டி20 தொடரை நடத்தி இருக்கிறது.

இப்படி டி20 கிரிக்கெட் அசுரத்தனமாக வளர்ச்சி அடைந்து வரும் இந்த நிலையில் நடைபெற இருக்கின்ற காரணத்தினால்தான், தற்போதைய ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வித்தியாசமான ஒன்றாக அமைந்திருக்கிறது. மேலும் தொடர்ச்சியாக ஒரு நாள் போட்டிகள் தொடர்ந்து நடக்க, ரசிகர்களுக்கு மீண்டும் ஒருநாள் கிரிக்கெட்டில் மீது ஆர்வம் திரும்பி இருக்கிறது.

இந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு வரும் என்று, கிரிக்கெட் உலகின் பல நாட்டு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த வகையில் இந்தியாவின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறலாம் என்று மக்கள் சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் 50 ஓவர் கிரிக்கெட் வடிவத்தில் ஒரு சராசரியான அணியாகத்தான் இருக்கிறார்கள்.

பாகிஸ்தான் டி20 கிரிக்கெட்டில் நல்ல அணியாக விளையாடுகிறது. ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் அப்படி அல்ல. என்னுடைய முதல் மூன்று தேர்வுகளாக அரையிறுதிக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் வருகின்றன.நான்காவது அணியாக நியூசிலாந்து வருகிறது. இதுதான் என்னுடைய உலகக்கோப்பை அரைஇறுதி 4 அணிகள்!” என்று கூறியிருக்கிறார்!