“பாகிஸ்தான் கிரிக்கெட் மிகப்பெரியது ; இந்தியா நரகத்திற்கு செல்லலாம்” – பாகிஸ்தான் மியான்ட்தத் அதிரடி தாக்கு!

0
10916
Asiacup2023

2012 -13க்கு பிறகு இந்திய பாகிஸ்தான் அணிகள் தனிப்பட்ட முறையில் கிரிக்கெட் விளையாடுவதை அரசியல் காரணங்களால் நிறுத்தி உள்ளன. பாகிஸ்தான் தயாராக இருந்தாலும் இந்திய தரப்பு தயாராக இல்லை!

இந்த நிலையில் இந்த ஆண்டு ஆசியக்கோப்பை தொடர் பாகிஸ்தானில் வைத்து நடத்தப்பட வேண்டியதாக இருந்தது. ஆனால் இதற்கு இந்திய அரசு பாதுகாப்பு காரணங்களைக் காட்டி மறுத்துவிட்டது.

- Advertisement -

ஆசியக் கோப்பை நடைபெறுமா? இல்லையா? என்று இழுபறி நீடித்து வந்த நிலையில் பாகிஸ்தானில் நான்கு போட்டிகளும், இலங்கையில் 9 போட்டிகளும் எனப் பிரித்து நடத்த இறுதியாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொண்டது.

இதையடுத்து ஆசியக்கோப்பை ஆகஸ்ட் மாதம் இறுதியில் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த முறை ஒருநாள் கிரிக்கெட் போட்டி வடிவத்தில் நடைபெறுவதால் ஒருநாள் உலகக்கோப்பைக்கான சிறந்த பயிற்சியாக இந்த தொடர் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

தற்பொழுது இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஜாவித் மியான்ட்தத் அதிரடியாகத் தனது கருத்தைக் கூறி இருக்கிறார். தற்பொழுது அவரது கருத்து மிகப்பெரிய அளவில் சமூக வலைதளத்தில் சர்ச்சையாகி வருகிறது.

- Advertisement -

ஜாவித் மியான்ட்தத் கூறுகையில்
“பாகிஸ்தான் 2012ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தது. 2016ஆம் ஆண்டு இந்தியா வந்திருக்க வேண்டியது. நாம் இப்பொழுது ஒரு முக்கியமான முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் இருக்கிறோம். அதாவது இந்தியாவில் வைத்து உலகக்கோப்பை நடைபெற்றால் உலகக்கோப்பையில் கூட நாம் விளையாட செல்லக்கூடாது.

நாம் எப்பொழுதும் அவர்களுடன் எங்கும் விளையாட தயாராக இருந்தாலும் அவர்களுடைய பதில் அதற்கு நியாயமாக இல்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் மிகப்பெரியது. இன்னும் நாம் தரமான கிரிக்கெட் வீரர்களை உருவாக்கியே வருகிறோம். இந்தியா வேண்டுமானால் நரகத்திற்குச் செல்லட்டும். நாம் அங்கு போய் விளையாடாவிட்டால் நமக்கு பெரிய அளவில் பாதிப்பு வந்துவிடும் என்று நான் நினைக்கவில்லை.

ஒருவரால் அண்டை வீட்டாரைத் தேர்ந்தெடுக்க முடியாது. எனவே ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைத்து வாழ்வது நல்லது. கிரிக்கெட் என்பது மக்களை ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாக கொண்டு வரும் விளையாட்டு. மேலும் இரு தரப்பிலும் இருக்கும் புரியாமைகள் மற்றும் குறைகளை அகற்றக் கூடிய விளையாட்டு. ஆனால் அவர்கள் இந்த முறையில் நடந்து கொள்ளவில்லை. எனவே நாம் இதில் முக்கிய முடிவு எடுக்க வேண்டிய நேரம் இது!” என்று கூறி இருக்கிறார்!