இந்திய கிரிக்கெட்

இந்திய அணி என்ன வேணா செய்யட்டும்.. ஆனா நாங்க இத செஞ்சு சாம்பியன் ஆவோம் – சல்மான் அலி ஆகா பேச்சு

இன்று இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆசியக் கோப்பை தொடரின் இறுதி போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு முன்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா தங்களது திட்டங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

ஆசியக் கோப்பை தொடர் 41 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதில் ஆசியாவில் மிகப்பெரிய அணிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரு முறை கூட இறுதிப் போட்டியில் மோதிக்கொண்டது கிடையாது. தற்போது முதல்முறையாக இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறார்கள்.

இந்திய அணியின் விருப்பம்

இந்த நிலையில் நேற்று ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கான போட்டோ ஷூட்டில் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா பதில் அளித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “இந்திய அணி என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் நாங்கள் நெறிமுறைகளை பின்பற்றுவோம். அவர்கள் வர விரும்பினால் வரலாம், வர விரும்பவில்லை என்றால் வர வேண்டாம். இதற்கு நாங்கள் எதுவும் செய்ய முடியாது”

- Advertisement -

நாங்கள் இதை செய்வோம்

“நம்மால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களில் நாம் கவனம் செலுத்தக் கூடாது. மீடியாவின் பேச்சுகள் வெளியிலிருந்து வரும் சத்தங்கள் ஆகியவற்றை நாங்கள் புறக்கணிக்கிறோம். எங்கள் இலக்கு ஆசியக் கோப்பை. நாங்கள் இங்கு நல்ல கிரிக்கெட் விளையாட வந்தோம். நாளை இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவதை நோக்கமாக கொண்டிருக்கிறோம்”

இதையும் படிங்க : 148 ரன்.. வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய நேபாள்.. முதல் முறை வரலாற்று வெற்றி.. சரியும் கிரிக்கெட் சரித்திரம்

“பாகிஸ்தான் இந்தியா போட்டிகள் எப்பொழுதும் அழுத்தம் மிகுந்ததாகத்தான் இருக்கும். இதை நான் இல்லை என்று சொன்னால் அது தவறானதாகிவிடும். கடந்த முறை இந்திய அணியை விட நாங்கள் அதிக தவறுகள் செய்தோம், அதனால் தோற்றோம். இந்த வடிவத்தில் யார் அதிக தவறு செய்கிறார்களோ அவர்கள் தோல்வி அடைகிறார்கள். நாங்கள் இறுதிப் போட்டியில் தவறுகளை குறைத்து கோப்பையை வெல்வோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by