பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா உலகின் எந்த அணியையும் தங்களால் தோற்கடிக்க முடியும் என இந்திய அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக பேசியிருக்கிறார்.
நடப்பு ஆசிய கோப்பை தொடரில் நாளை இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ஒட்டுமொத்த ஆசியக் கோப்பை தொடரும் இந்த இரண்டு அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியை அடிப்படையாக வைத்து நடத்தப்படுகிறது. எனவே இருதரப்பிலும் எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறது.
பாகிஸ்தானின் முக்கிய வெற்றி
இந்த ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக யுஏஇ மண்ணில் ஆப்கானிஸ்தான் மற்றும் யுஏஇ அணிகளுக்கு எதிராக முத்தரப்பு டி20 தொடரில் பாகிஸ்தான் விளையாடியது. இந்தத் தொடரில் இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வெறும் 66 ரன்னுக்கு சுருட்டி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
மேலும் யுஏஇ கண்டிஷனுக்கு ஐந்து சுழல் பந்துவீச்சாளர்களை பிளேயிங் லெவனில் வைக்க முடிவதும், பேட்டிங் வரிசை ஒன்பது வரையில் இருப்பதும் பாகிஸ்தானின் பலத்தை தற்காலிகமாக அதிகரித்திருக்கிறது. நேற்று ஓமான் அணிக்கு எதிராக 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது.
எங்களால் வெல்ல முடியும்
இந்த நிலையில் ஓமான் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா இந்திய அணிக்கு எதிரான போட்டி குறித்தும் பேசி இருக்கிறார். அதில் தங்கள் பலம் என்னவென்பது குறித்து கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : பாகிஸ்தான் போட்டி.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. கம்பீர் 2 அதிரடி மாற்றம்.. வெற்றி யார் பக்கம்?
இதுகுறித்து சல்மான் அலி ஆகா பேசும்பொழுது “கடந்த இரண்டு மூன்று மாதங்களாக நாங்கள் சிறப்பான கிரிக்கெட் விளையாடி வருவதாக நினைக்கிறேன். நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். நாங்கள் தற்போது முத்தரப்பு தொடர் ஒன்றை மிகவும் வசதியாக எளிமையாக வென்று இருக்கிறோம். எனவே நாங்கள் நல்ல கிரிக்கெட்டை தொடர்ந்து விளையாட வேண்டும். எங்கள் திட்டத்தை நீண்ட காலத்திற்கு செயல்படுத்த முடிந்தால், நாங்கள் உலகின் எந்த அணியையும் வீழ்த்த முடியும் என்று நினைக்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.






