2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு ஒரு குறிப்பிட்ட வீரரை மென்டராக கொண்டுவர வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பசித் அலி வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் தொடங்க இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தனது போட்டிகள் அனைத்தையும் துபாய் மைதானத்தில் விளையாடுகிறது. பாகிஸ்தான் இந்தியா இடம் பெற்றிருக்கும் குழுவில் இடம் பெற்று இருக்கிறது. எனவே இந்த இரு அணியும் மோதிக் கொள்ளும் மெகா போட்டி நடக்க இருக்கிறது.
ஆப்கானிஸ்தான் அணியின் மாஸ்டர் பிளான்
ஆப்கானிஸ்தான் அணி 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் போது தங்கள் அணியின் மென்டராக இந்திய முன்னாள் வீரர் அஜய் ஜடேஜாவை கொண்டு வந்தது. இது தொடர்ந்து 2024 வெஸ்ட் இண்டீஸ் இல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில், கரீபியனின் லெஜெண்ட் பிராவோவை மென்டராக கொண்டு வந்தது. அந்த அணிக்கு இது நல்ல முறையில் பலன் கொடுத்தது.
இதைத்தொடர்ந்து தற்போது பாகிஸ்தானில் நடக்க இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில், பாகிஸ்தானின் முன்னாள் கேப்டனும் டி20 உலகக் கோப்பையை வென்றவருமான யூனிஸ் கானை மென்டராக கொண்டு வந்திருக்கிறது. தற்பொழுது இதே வகையில் பாகிஸ்தானும் செல்ல வேண்டும் என பசித் அலி வலியுறுத்தி இருக்கிறார். இதற்காக 2007 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக இறுதி போட்டியில் சாம்பியன் டிராபியை வென்ற சர்ப்ராஸ் அகமதுவை மென்டராக கொண்டுவர கேட்டிருக்கிறார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தூங்குகிறதா?
இதுகுறித்து பசித் அலி பேசும் பொழுது “ஆப்கானிஸ்தான் மிகச் சிறந்த வீரரான யூனிஸ் கானை மென்டராக நியமித்திருக்கிறது. இது ஒரு சிறந்த முடிவு. ஆனால் இங்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தூங்கிக் கொண்டிருக்கிறது. இந்திய அணிக்கு எதிராக விளையாட இருக்கும் பாகிஸ்தான் அணிக்கு ஒரு நல்ல மென்டர் தேவை. அது கடந்த முறை சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணிக்கு எதிராக வென்ற சர்பராஸ் அகமதுவாக இருக்க வேண்டும்!”
இதையும் படிங்க: ஸ்மித்துக்கு பொறாமைதான்.. இருந்தாலும் அவரோட வேதனை எனக்கு புரிகிறது – டி20 லீக் குறித்த கருத்துக்கு சேவாக் பதிலடி
“அவரைக் கொண்டு வந்தால் அவருடைய ஆலோசனைகள் சிறப்பாக செயல்படும். இந்திய மணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் வென்று கோப்பையை உயர்த்திய தருணம் அவருக்கு இருக்கிறது. நான் இதற்கு வேறு யார் பெயரையும் கூற மாட்டேன். இந்த பொறுப்புக்கு அவர்தான் மிகவும் சரியானவர்” என்று கூறி இருக்கிறார்.






