மறுபடியும் முதல்ல இருந்தா ?? “இந்தியா அணிக்கு சாதகமாகவே ஆடுகளம் இருக்கும்” – ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் சர்ச்சை பேட்டி!

0
2308

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர்கள் முடிந்து இந்திய அணி வீரர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து புறப்பட்டு சென்றுள்ளனர் . இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி வருகின்ற ஏழாம் தேதி இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் நகரில் அமைந்திருக்கும் ஓவல் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது .

2021-2023 ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி வருகின்ற ஏழாம் தேதி நடைபெற இருக்கிறது . இந்தப் போட்டியில் விளையாட உள்ள இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் இங்கிலாந்து புறப்பட்டு சென்றனர் . ஐபிஎல் தொடர் முடிவடைந்ததால் கிரிக்கெட் ரசிகர்களும் இந்த போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் .

- Advertisement -

நடந்து முடிந்த டெஸ்ட் சைக்கிளில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணி முதல் இரண்டு இடங்களை பெற்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது . கடந்த முறையும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியா நியூசிலாந்து அணி இடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது .

இதன் காரணமாக இந்த முறை கோப்பையை வெல்ல அதிக முனைப்பு காட்டி தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது . அணியில் முக்கிய வீரர்கள் பும்ரா ரிஷப் பண்ட் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் காயம் காரணமாக வெளியேறி உள்ள நிலையில் இந்திய அணி அனுபவ வீரரான அஜின்கியா ரஹானேவை மீண்டும் அணிக்கு அழைத்திருப்பது பேட்டிங்கை வலுப்படுத்துவதாக உள்ளது . சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணிக்காக அவர் திறமையான பேட்டிங்கை வெளிப்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

ஆஸ்திரேலியா அணி கடந்த முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெறவில்லை . ஆனால் இந்த முறை புள்ளிகளின் பட்டியலில் முதலிடம் பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது . மேலும் இந்தியாவில் நடைபெற்ற நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்து இருந்தாலும் ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று மற்றொரு டெஸ்ட் போட்டியை டிரா செய்து இருக்கிறது . அந்த அணியும் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டு துறைகளிலும் சிறப்பாகவே விளங்கி வருகிறது .

- Advertisement -

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் துணை கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் இந்தியாவில் எதிர்கொள்வது போன்ற சவாலையே இங்கிலாந்திலும் சந்திக்க வேண்டி இருக்கும் என தெரிவித்திருக்கிறார் . இதுகுறித்து பேட்டி அளித்திருக்கும் அவர் ” இறுதிப் போட்டி நடைபெற இருக்கும் ஓவல் மைதானத்தின் ஆடுகளம் ஆட்டத்தின் இறுதி நாட்களில் இந்திய ஆடுகளங்களைப் போலவே சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாகவே அமையும். என்று தெரிவித்திருக்கிறார்

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசி இருக்கும் அவர் ” ஓவல் மைதானம் கிரிக்கெட் ஆடுவதற்கு உலகின் தலைசிறந்த இடம் இங்கு கிடைக்கும் வேகம் மற்றும் பவுன்ஸ் பேட்டிங் ஆடுவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் . அங்கு டெஸ்ட் போட்டியை விளையாடுவதற்கு ஆவலாக இருக்கிறேன்” என்று கூறி முடித்தார் .