கடைசிப் பந்தில் அவுட் ; ஆனால் நோ-பால்; சந்திப்பை சிக்ஸ் அடித்து ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத்தை வெல்ல வைத்த அப்துல் சமத்!

0
8665
Ipl2023

இன்று ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிக்கொண்ட மிகவும் பரபரப்பான போட்டி நடந்து முடிந்திருக்கிறது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் விக்கட்டுக்கு 54 ரன்கள் வர ஜெய்ஸ்வால் 18 பந்தில் ஐந்து பவுண்டரி இரண்டு சிக்ஸர்கள் உடன் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த பட்லர் மற்றும் கேப்டன் சஞ்சு சாம்சன் ஜோடி அதிரடியாக விளையாடி 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது. பட்லர் 59 பந்தில் 10 பவுண்டரி நான்கு சிக்ஸர்கள் உடன் 95 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

சிறப்பாக விளையாடிய கேப்டன் சஞ்சு சாம்சன் 38 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் 66 ரண்களும், சிம்ரன் ஹெட்மையர் 7 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்கள். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து விளையாடிய ஹைதராபாத் அணிக்கு முதல் விக்கட்டுக்கு 51 ரன்கள் வந்தது. அன்மோல்ப்ரீத் சிங் 33, அபிஷேக் ஷர்மா 55, ராகுல் திரிபாதி 47, ஹென்றி கிளாசன் 26, எய்டன் மார்க்ரம் 6 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

- Advertisement -

கடைசி இரண்டு ஓவர்களுக்கு 41 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆட்டத்தின் 19 ஆவது ஓவரை வேகப்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் வீச அந்த ஓவரில் கிளன் பிலிப்ஸ் முதல் மூன்று பந்துகளில் தொடர்ந்து சிக்ஸர்களையும் அடுத்த பந்தில் பவுண்டரியையும் விளாசி அதற்கடுத்த பந்தில் ஆட்டம் இழந்தார். கடைசி பந்தை அந்த ஓவரில் சந்தித்த யான்சென் இரண்டு ரன்கள் எடுத்தார்.

இதற்கு அடுத்து கடைசி ஓவருக்கு 17 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. அந்த ஓவரை சந்தித்த அப்துல் சமத் முதல் பந்தில் இரண்டு ரன்கள், இரண்டாவது பந்தில் சிக்சர், மூன்றாவது மீண்டும் இரண்டு ரன், நான்காவது பந்தில் ஒரு ரன் எடுத்தார்.

வெற்றிக்கு இரண்டு பந்தில் ஆறு ரன்கள் தேவை என்ற நிலையில் யான்சன் ஐந்தாவது பந்தில் ஒரு ரன் எடுத்தார். கடைசிப் பந்தில் அப்துல் சமத் ஐந்து ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில், சந்திப் பேசிய அந்தப் பந்தை நேராக சமத்து தூக்கி அடிக்க அது பட்லர் கையில் கேட்ச் ஆனது.

இதனால் ஹைதராபாத் டக் அவுட் சோகத்தில் மூழ்க, திடீரென்று நோ-பாலுக்கான சத்தம் வர உற்சாகம் பிறந்தது. மீண்டும் சந்திப் கடைசிப் பந்தை வீச, அதை அப்துல் சமத் அபாரமாக நேராக தூக்கி சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். இறுதிவரை களத்தில் நின்ற அவர் 7 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். கடந்த முறை தோனிக்கு எதிராக அபாரமாக செயல்பட்ட சந்திப் இந்த முறை ஒரு நோபால் வீசி கோட்டை விட்டார்.

11 ஆட்டங்களில் ஆறாவது தோல்வியை சந்தித்து இருக்கும் ராஜஸ்தான் அணிக்கு ப்ளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் இது பெரிய பின்னடைவை உருவாக்கி இருக்கிறது. ஹைதராபாத் அணிக்கு பத்தாவது ஆட்டத்தில் இது மூன்றாவது வெற்றிதான் என்பது குறிப்பிடத்தக்கது!