இந்தியாவின் பவுலிங் அவ்வளவு சிறப்பாக இல்லை; முதல் இன்னிங்சில் 300 அடிச்சு ஜெயிச்சிருக்கலாம் – ஸ்டீவ் ஸ்மித் பேட்டி!

0
3679

எங்களது பேட்டிங் உலகத்தரத்தில், முதல் இன்னிங்சில் 300 ரன்கள் அடிச்சிருந்தால், வெற்றி பெற முயற்சி செய்திருக்கலாம் என ஸ்டீவ் ஸ்மித் பேட்டியளித்துள்ளார்.

பார்டர் கவாஸ்கர் டிராஃபியின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 177 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஜடேஜா 5 விக்கெட்டுகளும் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

- Advertisement -

அதை தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி 400 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. 223 ரன்கள் முன்னிலையும் பெற்றது. ஆஸி., அணியின் அறிமுகவீரர் மற்றும் ஸ்பின்னர் டாட் மர்பி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இரண்டாவது இன்னிசை தொடர்ந்த ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன்கள் களத்திற்கு வந்ததும் தெரியாமல் பெவிலியன் திரும்புவதும் தெரியாத அளவிற்கு பேட்டிங் செய்தனர். குறிப்பாக ரவிச்சந்திரன் அஸ்வின் சுழலில் சிக்கி சின்னா பின்னம் ஆகினர் என்று கூறலாம். 91 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர்.

சரியாக உணவு இடைவேளை முடிந்தவுடன் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலியா அணி, தேநீர் இடைவேளை வருவதற்கு பத்து நிமிடம் முன்னரே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சுமார் இரண்டு மணி நேரத்திற்குள் ஆல் அவுட்டாகி இன்னிங்ஸ் தோல்வியை தழுவினர்.

- Advertisement -

போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில், “எங்களது பேட்டிங் உலகத்தரத்தில் இல்லை. குறிப்பாக முதல் இன்னிங்சில் 170 ரன்கள் என்பது மிகவும் குறைவானது. மேலும் மைதானத்தில் அந்த அளவிற்கு பிரச்சனை இல்லை. குறைந்தபட்சம் 300 ரன்கள் அடித்திருக்க வேண்டும். அது இந்திய அணியின் பேட்மன்களுக்கு பிரச்சனையாக இருந்திருக்கும். ரோகித் சர்மா, ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகிய மூவரும் நன்றாக விளையாடினார்கள். நல்ல டெக்னிக் வைத்து பந்துகளை எதிர்கொண்டார்கள். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அதை செய்ய தவறிவிட்டோம்.

பெரும்பாலான மைதானங்களில் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வது என்பது மிகவும் கடினமானதாக இருக்கும். ஆகையால் முதல் இன்னிங்ஸில் போதுமானவரை நிறைய ரன்களை அடித்திருக்க வேண்டும். எதிரணி பவுலர்கள் நன்றாக செயல்பட்டார்கள் என்பதை விட ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் உரிய தரத்தில் விளையாட உள்ளது. அதுதான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.” என்றார்.