2023 ஐபிஎல் பெஸ்ட் பிளேயிங் லெவனில் ஒரு சிஎஸ்கே வீரருக்கு மட்டுமே இடம்…. பதிலடி கொடுத்த இன்னொரு சிஎஸ்கே

0
1612

2023 ஐபிஎல் சீசனின் பெஸ்ட் பிளேயிங் லெவனை தேர்வு செய்ததில், கோப்பையை வென்ற சிஎஸ்கே அணியிலிருந்து ஒருவர் மட்டுமே இருந்ததற்கு, பதிலடி கொடுத்திருக்கிறார் சிஎஸ்கே வீரர் டிவைன் பிரெட்டோரியஸ்.

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் மார்ச் கடைசியில் துவங்கி மே மாதம் இறுதி வரை இரண்டு மாதங்கள் நடைபெற்று முடிந்திருக்கிறது. ஐபிஎல் லீக் போட்டிகளில் பல்வேறு திருப்புமுனைகள் நடைபெற்று, கடைசி நாள் கடைசி போட்டி கடைசி ஓவர் வரை யார் அந்த நான்கு பேர் என்கிற பரபரப்பு நிலவியது.

- Advertisement -

முதல் குவாலிபயர் போட்டியில் விளையாடிய சிஎஸ்கே அணி பலம் மிக்க குஜராத் அணியை வீழ்த்தி பைனலுக்குள் முதல் அணியாக முன்னேறியது. எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்று வந்த மும்பை அணியை வீழ்த்தி இரண்டாவது வாய்ப்பின் மூலம் பைனலுக்குள் நுழைந்தது குஜராத் அணி.

இரு அணிகளுக்கும் இடையே நடைபெறவிருந்த பைனல், மழை காரணமாக முதல் நாள் தள்ளிப்போனது. அடுத்த நாளும் மழை காரணமாக தாமதம் ஆனது. கடைசியில் ஓவர்கள் குறைக்கப்பட்டு சிஎஸ்கே அணி 15 ஓவர்களில் 171 ரன்கள் சேஸ் செய்து ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றது.

இந்த சீசனில் 12 சதங்கள், 150 க்கும் மேற்பட்ட அரைசதங்கள் மற்றும் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட முறை 200+ ரன்கள் என இதுவரை காணாத அளவிற்கு பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டன. பந்துவீச்சிலும் கிட்டத்தட்ட 20 பேர் 20 விக்கெட்டுக்கும் மேல் வீழ்த்தினர். ஒரு சீசனில் இத்தனை பேர் 20 விக்கெட்டுக்கும் மேல் வீழ்த்தியது இதுவே முதல்முறையாகும்.

- Advertisement -

இப்படி பேட்டிங் பௌலிங் இரண்டிலும் அசத்திய சிறந்த வீரர்களை வைத்து பெஸ்ட் பிளேயிங் லெவன் தேர்வு செய்யப்பட்டிருந்தது. கிரிக்இன்போ குழுவினர் தேர்வு செய்த பெஸ்ட் பிளேயிங் லெவனில் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணியிலிருந்து ஜடேஜா மட்டுமே இடம்பெற்று இருந்தார்.

இதனை கவனித்து, இதற்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் சிஎஸ்கே வீரர் டிவைன் பிரிட்டோரியஸ். அவர் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைத்து அதில், “இந்த அணியை பார்க்கையில் வெற்றி பெற்ற அணியில் இருந்து ஒருவர் மட்டுமே இடம் பெற்று இருக்கிறார். இதன் மூலம் சிஎஸ்கே அணி ஒட்டுமொத்த அணியாக செயல்பட்டது.” தனிப்பட்ட வீரர் என்று குறிப்பிட்ட ஒருவர் அல்லது இருவர் மட்டுமே செயல்படவில்லை என்கிறவாறு பதிவிட்டு இருந்தார்.