“ஒரு பவுலர் தப்பு செய்யல; நாலு பவுலரும் ஒரே தப்பதான் செஞ்சாங்க” – விளாசி தள்ளிய ஹர்பஜன் சிங்!

0
679
Harbhajan

நேற்று இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது!

இந்த போட்டியில் முதலில் டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆரம்பத்தில் ஆஸ்திரேலியா அணி 76 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது.

- Advertisement -

இதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த ஸ்மித் மற்றும் ஹெட் இருவரும் சேர்ந்து ஆட்டம் இழக்காமல் 251 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியின் நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக உடைத்து விட்டார்கள். சிறப்பாக விளையாடிய ஹெட் 146 ரன்கள் உடனும், ஸ்மித் 95 ரன்கள் உடனும் களத்தில் இருக்கிறார்கள்.

நேற்றைய இந்திய வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் ஒழுக்கம் சரியாக அமையவில்லை. நிலைமைக்குத் தகுந்தவாறு பந்தை வீசாமல் அவர்களது விருப்பம் போல் வீசியதாக இருந்தது.

இதுகுறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ” இங்கிலாந்தில் பேட்டிங் செய்வதற்கு ஓவல் ஆடுகளம் நல்ல ஆடுகளமாக இருக்கலாம். ஆட்டம் தொடரும்பொழுது இன்னும் பேட்டிங் செய்ய வசதியாக இருக்கும். இந்த விக்கெட்டில் பேட்டிங் செய்ய இந்திய பேட்ஸ்மேன்களுக்குக் கடினமாக இருக்காது என்று நினைக்கிறேன். கில் மற்றும் கோலி இருவரும் நல்ல பார்மில் இருக்கிறார்கள். வானிலை சீராகிவிட்டது மேகமூட்டமும் இல்லை.

- Advertisement -

டாஸ் மட்டும் இந்தியாவுக்குச் சாதகமாக போனது. மற்ற எல்லாமே ஆஸ்திரேலியாவுக்குதான் சாதகமாக அமைந்தது. நேற்றைய ஆட்டத்தின் எந்த ஒரு பகுதியிலும் இந்திய அணிக்குப் பிடிப்பு இல்லை. நிபந்தனைகளைக் கருத்தில் கொண்டு அணித் தேர்வு சரியாகவே இருந்தது. ஆனால் பந்துவீச்சில் லைன் வெளியே சென்று கொண்டே இருந்தது, லென்த் குறைந்து கொண்டே வந்தது.

ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் பேக் புட்டில் சவுகரியமாக விளையாடினார்கள். இந்தியா புதிய பந்தை நன்றாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. நிறைய கேரி ஆன் மற்றும் ஆஃபர்கள் இருந்தது. பந்து ஒன்று இரண்டு முறை எட்ஜ் எடுத்தது. ஆனால் அது ஒரு பொருட்டல்ல. மேலும் தவறு செய்தது ஒரு பந்துவீச்சாளர் அல்ல. எல்லா பந்துவீச்சாளரும் ஒரே தவறைதான் செய்தார்கள்!” என்று கூறியுள்ளார்!

- Advertisement -