இந்திய கிரிக்கெட்

1952க்கு பிறகு.. ஆஸியில் தரமான செய்கை.. ஒரே நாளில் விழுந்த 17 விக்கெட்டுகள்.. பும்ரா தந்த முன்னிலை

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு மெகா ஏலம் இந்த ஆண்டு சவுதி அரேபியாவில் நடக்க இருக்கிறது. தற்போது ஏலப்பட்டியலில் புதிதாக மூன்று வீரர்களை இணைப்பதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி கொடுத்திருக்கிறது.

- Advertisement -

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் மெகா ஏலத்துடன் நடைபெற இருக்கிறது. இதற்கான மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் சவுதி அரேபியா ஜெட்டா நகரில் நடைபெற இருக்கிறது. தற்போது இந்த ஏலத்தின் பட்டியலில் புதிதாக மூன்று வீரர்களை இணைப்பதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பிசிசிஐ கொண்டு வந்த புதிய விதி

இந்த முறை இந்திய கிரிக்கெட் வாரியம் மினி ஏலத்தில் மட்டும் கலந்து கொண்டு அதிக தொகையை சம்பாதிக்க வீரர்கள் திட்டமிடுவதை தடுப்பதற்காக, மெகா ஏலத்தில் கலந்து கொள்ளாத வீரர்களை அடுத்த இரண்டு மினி ஏலத்திலும் கலந்து கொள்ள முடியாது என்கின்ற விதியை கொண்டு வந்தது.

மேலும் ஒரு வீரர் ஒரு அணிக்கு தேர்வு செய்யப்பட்ட பிறகு காயம் இல்லாமல் வேறு காரணங்களுக்காக அணியை விட்டு விலகினால் அவராலும் அடுத்த இரண்டு வருடம் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாது என்று விதி கூறுகிறது. இதன் மூலம் ஏலத்தில் குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பது அல்லது குறைந்த பணத்திற்கு அணிகள் வாங்கினால் விலகுவது போன்றவற்றை வீரர்களால் செய்ய முடியாது.

- Advertisement -

புதிதாக இணைந்த மூன்று வீரர்கள்

இந்த நிலையில் காயத்தின் காரணமாக ஐபிஎல் ஏலத்தின் பட்டியலில் இணைய முடியாமல் இருந்த இங்கிலாந்தின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், மற்றும் இந்தியாவுக்காக அண்டர் 19 கிரிக்கெட் விளையாடி தற்போது அமெரிக்காவுக்காக விளையாடும் இடது கை வேகம் பந்துவீச்சாளர் சவுரப் நெட்ரவால்கர் இருவரும் மீண்டும் ஐபிஎல் மெகா ஏலப் பட்டியலில் இணைந்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க : ஸ்டெயினுக்கு அடுத்து பும்ரா செய்த மாஸ் சம்பவம்.. ஸ்மித்துக்கு நடந்த சோகம்.. திருப்பி கொடுக்கும் இந்திய அணி

இவர்கள் இருவரோடு மும்பை மாநில அணிக்கு விளையாடும் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஹர்திக் தாமோர் பெயரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது. இவர்கள் மூவருமே காயத்தின் காரணமாக ஆரம்பத்தில் இணைய முடியாமல் இருந்தார்கள். தற்போது காயம் சரியானதால் பிசிசிஐ நிலைமையை புரிந்து கொண்டு அனுமதி அளித்திருக்கிறது.

- Advertisement -
Published by
Tags: Bumrah

Recent Posts