விராட் கோலி விக்கெட் எடுக்கிறதெல்லாம் சிம்பிள் இதை மட்டும் பண்ணா போதும் – ராபின்சன்

0
671
Robinson and Kohli

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆடி வருகிறது முதல் மூன்று ஆட்டங்களில் முடிவில் 1-1 என்று தொடர் சமநிலையில் உள்ளது. 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றிகரமாக செயல்பட்ட இந்திய அணி 3-வது டெஸ்ட் போட்டியில் மோசமான தோல்வியை தழுவியுள்ளது. அதுவும் முதல் இன்னிங்சில் வெறும் 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக பார்க்கப்பட்ட விராத் கோலியின் மோசமான ஆட்டம் பெரும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.

இந்த மூன்றாவது டெஸ்டில் இந்திய அணியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் ராபின்சன். இதுவரை வெறும் 4 ஆட்டங்கள் ஆடி உள்ள ராபின்சன் அதற்குள்ளேயே விராட் கோலியை இரண்டு முறை அவுட் ஆக்கி உள்ளார். கடந்த 8 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி எதுவுமின்றி கொண்டு வந்த இங்கிலாந்து அணிக்கு முதல் வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளார் ராபின்சன். இருபத்தி ஏழு வயதான ராபின்சன் சசெக்ஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ராபின்சன் தான் ஆட்டநாயகன் விருது பெற்றார். அதன்பிறகு இவர் பேசும் பொழுது விராட் கோலியை இப்படித்தான் ஆக்கினோம் என்றும் அவர் கூறியுள்ளார். விராட் கோலி விக்கெட் எடுக்கிறது சிம்பிள் பிளான்

- Advertisement -

நான்காவது மற்றும் ஐந்தாவது ஸ்டம்ப் லைனில் தொடர்ந்து போட்டுக் கொண்டே இருந்தால் கண்டிப்பாக விராத் கோலி எட்ஜ் முறையில் அவுட்டாகி விடுவார். இதுதான் எங்களின் திட்டம் என்று ராபின்சன் கூறியுள்ளார். அவர் கூறியது போலவே தான், 55 ரன்கள் வரைக்கும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த விராட்கோலி இதே போன்ற ஒரு பந்தை அடிக்க முயன்று அவுட் ஆனார். முதல் இன்னிங்சிலும் ஆண்டர்சன் பந்து வீச்சில் இதே முறையில்தான் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டில்தான் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார் ராபின்சன். ட்விட்டர் சர்ச்சை காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டாலும் தற்போது ஸ்டாக் பிராடு என்ற முக்கிய வீரர்கள் இல்லாத காரணத்தினால் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார். தற்போது சிறப்பாக பந்துவீசி வரும் அவர் பேசுகையில் “ஆண்டர்சன் உடன் இணைந்து புது பந்தை பின் செய்வது மிகவும் பெரிய விஷயம் என்னால் முடிந்த அளவு அவரிடமிருந்து நுணுக்கங்களை கற்று வருகிறேன்” என்று கூறியுள்ளார்.

4 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ராபின்சன் ஏற்கனவே ரிஷப் பண்ட்டை நான்கு முறையும், விராத் மட்டும் ரோஹித்தை தலா இரண்டு முறையும் அவுட் ஆக்கி உள்ளார். அதோடு இல்லாமல் ராகுல், புஜாரா, டெய்லர், வில்லியம்சன் போன்ற மிகப்பெரிய விக்கட்டுகளையும் ஒருமுறை வீழ்த்தியுள்ளார். ஆண்டர்சனுக்கு பிறகு இங்கிலாந்து அணியை வழிநடத்த மற்றுமொரு சிறந்த வேகப்பந்து வீச்சாளர் கிடைத்துவிட்டார் என்று ரசிகர்கள் சிலாகித்துக் கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -