ODI.. இங்கிலாந்து 334… திருப்பி பயம் காட்டிய அயர்லாந்து.. பரபரப்பான போட்டியின் முடிவு!

0
14674
England

இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடருக்கு பயிற்சிபெறும் விதமாக, இங்கிலாந்து உள்நாட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. மேலும் இந்த தொடரை மூன்றுக்கு ஒன்று என வென்றது!

இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இங்கிலாந்து அணிக்கு முழு ஓய்வு கொடுத்து, தற்பொழுது இங்கிலாந்து அணியின் இரண்டாவது அணி உள்நாட்டில் அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதையடுத்து நேற்று இரு அணிகளுக்கும் இடையே ஆன இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர் வில் ஸ்மித் அபாரமாக விளையாடி 88 பந்துகளில் ஏழு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 94 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இவருக்கு அடுத்து சாம் ஹெயின் 82 பந்துகளில் 8 பவுண்டரிகள் உடன் 89 ரன்கள் எடுத்தார். பென் டக்கட் 48 ரன்கள் எடுக்க, இந்தத் தொடருக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்ட ஜாக் கிரவுலி தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்தது.

இதற்கு அடுத்து களம் இறங்கிய அயர்லாந்து அணிக்கு மேல் வரிசையில் யாரும் சரியான பங்களிப்பு தரவில்லை. நான்காவது வீரராக வந்த ஹாரி டெக்டர் 39 ரன்கள் எடுத்தார். ஆறாவது வீரர் ஜார்ஜ் டக்ரோல் 43 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இந்த நிலையில் ஒன்பதாவது விக்கெட்டாக விளையாட வந்த பேரி மெக்கார்தி 41, பத்தாவது ஆக வந்த கிரேஜ் எங் 40*, பதினொன்றாவதாக வந்த ஸ்டூவர்ட் லிட்டில் 29 என அதிரடியாக இறுதிக்கட்டத்தில் ரன்கள் எடுக்க ஆட்டத்தில் பரபரப்பு உண்டானது.

ஆனாலும் விக்கெட்டுகள் கைவசம் இல்லாத காரணத்தினால் 46.4 ஓவர்களில் 286 ரன்கள் எடுத்து அயர்லாந்து ஆல் அவுட் ஆகி, 48 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஒரு கட்டத்தில் சீக்கிரத்தில் சுருண்டு விடும் என்று எதிர்பார்த்த அயர்லாந்து, இறுதிக்கட்ட வீரர்களின் அதிரடியால் எழுந்தது.

நேற்று கைவசம் விக்கட்டுகள் இருந்திருந்தால் அயர்லாந்து அந்த இலக்கை எட்டிப் பிடித்திருக்க அதிக வாய்ப்புகள் இருந்தது. மேல் வரிசையில் இருந்து ரன்கள் வராத காரணத்தால் அயர்லாந்து இந்த போட்டியில் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -