கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

ஓடிஐ கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசை வெளியீடு; இந்திய பேட்ஸ்மேன்களுக்கான இடம்?

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்
கோப்பை தொடர் நடந்து முடிந்தது. இந்த உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது!

- Advertisement -

இதற்கு அடுத்து கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய தொடராக அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடக்க இருக்கிறது!

இந்தியாவில் நடைபெற இருக்கும் இந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்காக, இந்த தொடரில் விளையாட இருக்கும் ஒவ்வொரு அணிகளும் இப்பொழுது இருந்தே முன் தயாரிப்பில் ஈடுபட ஆரம்பித்துள்ளன!

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது, பழைய வீரர்களில் பார்மில் உள்ள வீரர்களை அணிக்குள் கொண்டு வருவது என்று எல்லா அணி நிர்வாகங்களும் எல்லாவிதமான பரிசோதனை முயற்சிகளிலும் தற்போது ஈடுபட்டு வருகின்றன!

- Advertisement -

ஒரு வழியாக டி20 கிரிக்கெட் காய்ச்சல் குணமடைந்து தற்போது அணி நிர்வாகங்கள் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்காகத் தங்களின் கவனத்தைக் குறித்து ஆரம்பித்துள்ளன.

தற்பொழுது ஐசிசி இதை மையப்படுத்தி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ள பேட்ஸ்மேன்கள் யார் என்று இந்த தொகுப்பில் பார்ப்போம்!

பாபர் ஆஸம்
இமாம் உல் அக்
வாண்டர் டேசன்
குயின்டன் டி காக்
டேவிட் வார்னர்
ஸ்டீவன் ஸ்மித்
ஜானி பேர்ஸ்டோ
கேன் வில்லியம்சன்
ரோகித் சர்மா
விராட் கோலி

கடந்த இரண்டு வருடங்களாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சொல்லிக் கொள்ளும்படி ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு பெரிதாக அமையவில்லை. ஆனாலும் அவர்களது பழைய செயல்பாட்டின் அடிப்படையில் முதல் 10 இடங்களுக்குள் தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விராட் கோலி தற்போது நல்ல பேட்டிங் ஃபார்மில் இருப்பதால், மீண்டும் அவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் உச்சத்தை எட்டலாம்!

- Advertisement -
Published by

Recent Posts