கிரிக்கெட்

அசால்ட்டாக ஆடிய இந்திய பேட்ஸ்மேன்கள், சரியான பாடம்புகட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி!! 2வது டி20 போட்டியில் இந்தியாவிற்கு நேர்ந்த சம்பவம்..

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.  

- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இரு அணிகள் விளையாடிய இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற நம்பிக்கையில் களமிறங்கி இந்திய அணிக்கு முதல் பந்திலேயே ரோகித் சர்மா ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். 

rohit sharma and nicolas pooran. Credits:BCCI

மற்றொரு துவக்க வீரர் சூரியகுமார் யாதவ் வெறும் 11 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இந்திய அணிக்கு அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 31 ரன்களும், ஜடேஜா 27 ரன்களும் அடித்து ஆட்டம் இழந்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்பொருள்களுக்கு ஆட்டம் இழந்து இந்திய அணியை பரிதாப நிலைக்கு தள்ளினர். முழுமையாக 20 ஓவர்கள் இந்திய வீரர்களால் பேட்டிங் செய்ய முடியவில்லை. 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெடுகளையும் இழந்து 138 ரன்கள் எடுத்திருந்தனர்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அபாரமாக பந்து வீசிய ஓபட் மெக்காய் நான்கு ஓவர்களில் ஒரு மெய்டன் உட்பட 17 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக புதிய சாதனைப் படைத்திருக்கிறார்.

- Advertisement -

எளிய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்திய அணியின் பந்துவீச்சு அவ்வளவு சுலபமாக அமைந்துவிடவில்லை. இருப்பினும் அணியின் துவக்க வீரர் பிரண்டன் கிங் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார். 52 பந்துகளில் 68 ரன்கள் அடித்த இவர் ஆவேஷ் கான் பந்தில் ஆட்டம் இழந்தார். மற்ற வீரர்கள் சொற்பொருள்களுக்கு ஆட்டமிழந்தபோது மேற்கிந்திய தீவுகள் அணியும் தடுமாறி வந்தது. 

இறுதியில் விக்கெட் கீப்பர் டெவான் தாமஸ் தன்னுடைய அதிரடியை வெளிப்படுத்தி 19 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றியை பெற்று தந்தது. 19.2 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்து, ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருக்கின்றன. 

17 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ஓபட் மெக்காய் எவ்வித குழப்பமும் இன்றி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மூன்றாவது டி20 போட்டி இதே வார்னர் பார்க் மைதானத்தில் ஆகஸ்ட் 2ம் தேதி நடைபெற இருக்கிறது.

Published by