நியூசிலாந்து வெஸ்ட்இண்டீஸ் 2வது ஒருநாள்.. ஷாய் ஹோப் அபார சதம்! தொடரை வென்ற பிளாக் கேப்ஸ்

0
52

நியூசிலாந்து அணி, வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 2வது போட்டி நேப்பியர் நகரில் உள்ள மெக்க்லீன் பார்க் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.  இந்த போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது.

மழை காரணமாக, வெஸ்ட்இண்டீஸ் அணி 34 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 247 ரன்கள் எடுத்தது. அதை நியூசிலாந்து அணி 33.3 ஓவர்களில் 5 விக்கெட் இழுத்து 248 ரன்கள் என்ற ஸ்கோரை எட்டியது. வெஸ்ட்இண்டீஸ் அணியின் பந்து வீச்சில், ஷாய் ஹோப் அபாரமாக விளையாடி 69 பந்துகளில் 13 பவுண்டரி, 4 சிக்ஸ் அடித்து 109 ரன்கள் என சதம் அடித்தார். இது வெஸ்ட் இண்டீஸ்க்கு முதல் பகுதியில் நல்ல தொடக்கத்தை அளித்தது.

- Advertisement -

ஹோப் சதம்:

கீசி கார்டி 31 பந்துகளில் 22 ரன்கள், ஜஸ்டின் கிரீவ்ஸ் 27 பந்துகளில் 22 ரன்கள், ரோமாரியோ ஷெபர்ட் 14 பந்துகளில் 22 ரன்கள் என பங்களித்தனர். நடு வரிசையில் ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட் 9 பந்துகளில் 13 ரன்களும் மத்தியூ ஃபோர்ட் 11 பந்துகளில் 21 ரன்கள் அடித்தனர்.

நியூசிலாந்தின் பந்து வீச்சில், நாதன் ஸ்மித் சிறப்பாக 7 ஓவர்களில் 42 ரன்கள் விட்டு 4 விக்கெட்கள் வீழ்த்தினார். கைல் ஜேமிசன் 7 ஓவர்களில் 62 ரன்கள் விட்டு 3 விக்கெட்கள் எடுத்தார். மைக்கேல் சான்ட்னர் 7 ஓவர்களில் 35 ரன்கள் விட்டு 1 விக்கெட் எடுத்தார்.
இதனால், வெஸ்ட்இண்டீஸ் அணி 247/9 என்ற ஸ்கோர் எடுத்தது. பின்னர், 248 ரன்கள் என்ற இலக்கை நியூசிலாந்து அணி  விரட்டியது.

- Advertisement -

தொடரை வென்ற நியூசிலாந்து:

தொடக்க வீரர் டெவான் கான்வே 84 பந்துகளில் 13 பவுண்டரி, 1 சிக்ஸ் அடித்து 90 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ரச்சின் ரவிந்திரா 46 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸ் அடித்து 56 ரன்கள்  என கான்வேயுடன் 106 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
வில்லியம் யங் 14 பந்துகளில் 11 ரன்கள், டாம் லாத்தம் 29 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்ஸ் அடித்து 39 ரன்கள் சேர்த்தார். மைக்கேல் பிரேஸ்வெல் 12 பந்துகளில் 11 ரன்கள் அடித்தார்.

இதையும் படிங்க: 135 ரன்.. அடுத்த ஜடேஜாவின் அதிரடி பெர்ஃபார்மன்ஸ்.. இந்திய அணி 2வது சுற்றுக்கு தகுதி

இறுதியில், மிட்செல் சான்ட்னர் 15 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸ் அடித்து 34 ரன்கள் எடுக்க நியூசிலாந்து அணியின்  வெற்றியை உறுதி செய்தார். வெஸ்ட்இண்டீஸ் பந்து வீச்சில், மத்தியூ ஃபோர்ட் 7 ஓவர்களில் 42 ரன்கள் விட்டு 1 விக்கெட் வாங்கினார். ஜேடன் சீல்ஸ் 6.3 ஓவர்களில் 51 ரன்கள் விட்டு 1 விக்கெட் எடுத்தார். போட்டியின் சிறந்த வீரராக வெஸ்ட்இண்டீஸ்  கேப்டன் ஷாய் ஹோப் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியுடன் நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.

- Advertisement -