NZ vs SA.. பயிற்சி போட்டியிலும் DLS செய்த சதி.. பரபரப்பான போட்டியில் வித்தியாசமான முடிவு!

0
1762
Boult

2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் பயிற்சி போட்டியில் இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரம் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வது என தீர்மானித்தது. கடந்த போட்டி போல் இல்லாமல் இந்த முறை கேன் வில்லியம்சன் கேப்டனாக உள்ளே வந்தார்.

- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு வில் எங் 12 ரன்களில் ஆட்டம் இழக்க அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 37 ரன்கள் எடுத்தும், டெவோன் கான்வே 78 ரன்கள் எடுத்தும் மற்றவர்கள் விளையாடுவதற்காக வெளியேறிக் கொண்டார்கள்.

இதற்கு அடுத்து நியூசிலாந்து அணிக்கு டாம் லாதம் 52, கிளன் பிலிப்ஸ் 43, மார்க் சாப்மேன் 20, ஜேம்ஸ் நீசம் 14, மிட்சல் சான்ட்னர் 16, டேரில் மிட்சல் 25, ரச்சின் ரவீந்தரா 0 என முடிக்க நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 321 ரன்கள் குவித்தது.

இதைத்தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு முதல் ஓவரை வீசிய நியூசிலாந்தின் டிரெண்ட் போல்ட் ரீசா ஹென்றிக்சை ரன் ஏதும் இல்லாமல் அனுப்பி வைத்தார்.

- Advertisement -

அடுத்து வந்த வாண்டர் டெசன் 51 ரன்கள், எய்டன் மார்க்ரம் 13, ஹென்றி கிளாசன் 39 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். குயின்டன் டி காக் ஆட்டம் இழக்காமல் 84, டேவிட் மில்லர் ஆட்டம் இழக்காமல் 18 ரன்கள் எடுத்திருந்தபொழுது, தென் ஆப்பிரிக்கா 37 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்திருந்தது.

அப்பொழுது குறுக்கிட்ட மழை நிற்காமல் தொடர்ந்து பெய்ய, இரண்டு அணி கேப்டன்களும் போட்டியை முடித்துக் கொள்வதாக அறிவித்தனர். அந்த நேரத்தில் தென் ஆப்பிரிக்கா 37 ஓவர்கள் 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று டிஎல்எஸ் காட்டியது. இந்த அடிப்படையில் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா தோல்வி அடைந்தது.

வழக்கமாக உலகக் கோப்பை தொடர்களில் தென் ஆப்பிரிக்காவுக்கு மழையும், டிஎல்எஸ் விதியும் எப்பொழுதும் சதி செய்தே வந்திருக்கிறது. தற்பொழுது அது விடாமல் பயிற்சி ஆட்டத்திலும் தொடர்வது சுவாரசியமான ஒன்றாக இருக்கிறது!