கால்பந்து, டென்னிஸ் விளையாட்டுகளுக்கு அடுத்து இன்றைய உலகில் கிரிக்கெட் விளையாட்டும் அதிகளவில் இரசிகர்களைக் கொண்டதாகவும், அதிகளவு வருமானத்தைத் தரக்கூடியதாகவும் இருக்கிறது. மற்ற விளையாட்டுகளைப் போலவே இதிலும் ஆண், பெண் இருவரும் தனித்தனி அணியாகப் பங்கேற்கிற்கிறார்.
ஆண்கள் கிரிக்கெட் என்று எடுத்துக்கொண்டால் அதற்கான வரவேற்பும், ஏற்பாடுகளும் இன்னபிற வசதிகளும் மிகவும் உச்சத்தில் இருக்கும். ஒரு சர்வதேச ஆண் கிரிக்கெட் வீரர் குறைந்தது ஐந்து ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடினாலே அவரது அடிப்படை வாழ்க்கைக்கு மேலானதைச் சம்பாதித்துக்கொள்ள முடியும்.
பெண்கள் கிரிக்கெட்டில் இதெல்லாம் அப்படியே நேரெதிராய் இருக்கிறது. என்னதான் காலங்கள் மாறியிருந்தாலும் சில வசதிகள் கிரிக்கெட்டில் பெண்களுக்கும் கிடைத்தாலும். பெண்கள் கிரிக்கெட்டிற்கான வரவேற்பும், பெண்கள் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான சம்பளமும் மிகவும் சொற்பம்தான். தற்பொழுது இலங்கை சென்று இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி விளையாடிய பொழுது, கடைசி நேரம் அந்தப் போட்டியை ஒளிப்பரப்ப தொலைக்காட்சி கிடைக்கவில்லை. இந்தளவில்தான் தற்போதும் பெண்கள் கிரிக்கெட்டின் நிலை இருக்கிறது.
தற்பொழுது இதில் ஒரு மாற்றமாக, மற்ற கிரிக்கெட் வாரியங்களுக்கு ஒரு முன் உதாரணமாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஒரு முக்கிய முடிவை எடுத்து அறிவித்திருக்கிறது. என்னவென்றால்; இனி ஒரு போட்டிக்கு ஆண் வீரருக்குத் தரப்படும் சம்பளம் பெண் வீராங்கனைகளுக்கும் தரப்படும் என்று அறிவித்திருக்கிறது. கிரிக்கெட் உலகில் என்றில்லாமல், பெண்களிடம் நிகழ்த்தப்படும் உழைப்பு சுரண்டலுக்கு எதிரான விழிப்புணர்வான ஒரு முடிவாக இது அமையும்.
ஆண் வீரர்கள் அதிகப்படியான போட்டிகளிலும், அதற்காக அதிகப்படியான பயிற்சியிலும் ஈடுபடுவதால் அதிக சம்பளத்தைப் பெறுவார்கள். பெண்கள் குறைவான போட்டிகளில் பங்கேற்பதால் குறைவான சம்பளத்தைப் பெறுவார்கள். ஆனால் ஒரு போட்டிக்கான சம்பளம் என்பது இருவருக்கும் ஒரே அளவில் வழங்கப்படும்.
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் & வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் சம்பளம், ஒரு போட்டிக்கு டாலரில் :
டெஸ்ட் போட்டி 10, 250
ஒருநாள் போட்டி 4, 500
டி20 போட்டி 2,500
பிளன்கட் ஷீல்டு 1, 750
போர்டு டிராபி மற்றும்
ஹாலிபர்டன் ஜான்ஸ்டோன் ஷீல்டு 800
சூப்பர் ஸ்மாஷ் 575