இந்திய கிரிக்கெட்

சூரியவன்சி கிட்ட அந்த விஷயத்தை தெளிவா பேசி இருக்கேன்.. இதனால மோசமானவர்களா மாற மாட்டோம் – கம்பீர் பேச்சு

​இளம் ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியின் பிளேயிங் லெவன் அணியில் சேர்க்கப்படாதது குறித்து தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேசிய விளக்கம் குறித்து இக்கட்டுரை விரிவாக விளக்குகிறது.

- Advertisement -

​சமீபகாலமாக சிறந்த ஃபார்மில் இருக்கும் இளம் பேட்டர் வைபவ் சூர்யவன்ஷிக்கு பிளேயிங் லெவன் வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்தன. அணி நிர்வாகத்தின் இந்த முடிவு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இது தொடர்பாக தனது நிலப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

​அணியில் நீண்ட காலமாக சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்களுக்கு போதிய வாய்ப்புகளையும், பாதுகாப்பான சூழலையும் உருவாக்கிக் கொடுப்பது அணி நிர்வாகத்தின் மிக முக்கியமான கடமையாகும். இதனால் தான் வைபவ் சூர்யவன்ஷி போன்ற திறமையான இளம் வீரர் நல்ல ஃபார்மில் இருந்தபோதிலும், அவருக்கான சரியான வாய்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

​இதுகுறித்து கௌதம் கம்பீர் பேசும்போது “இது எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. அவர் நல்ல ஃபார்மில் இருந்தார் என்பது உண்மைதான், ஆனால் நீண்ட காலமாக சிறப்பாகச் செயல்பட்டு வரும் வீரர்களின் காரணமாக, அவர் தனது வாய்ப்புக்காக சில நேரங்களில் காத்திருக்க வேண்டும் என்பதை நான் அவருக்குப் புரிய வைத்தேன். மேலும் ஒன்று, சமூக வலைதளங்களோ அல்லது வெளியாரின் சத்தமோ பிளேயிங் லெவன் அணியைத் தீர்மானிப்பதில்லை. டிரஸ்ஸிங் ரூமில் யார் இருக்கிறார்கள், அல்லது பயிற்சியாளரும் கேப்டனும் யார் நமக்கு போட்டியை வென்று தருவார் என்று நினைக்கிறார்கள், எது சிறந்த பிளேயிங் லெவன் மற்றும் நீண்ட காலமாக யார் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அது அமையும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​மேலும் அவர் தொடர்ந்து பேசும்போது “இன்று வைபவ் விளையாடினால், அபிஷேக் அல்லது சஞ்சு ஆகிய இருவரில் யாரை வெளியேற்றுவது என்பது குறித்து எனக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு கடினமான உரையாடலாக அது அமையும். எனவே, கடந்த ஒன்றரை அல்லது இரண்டு ஆண்டுகளாக இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு காம்பினேஷனை திடீரென்று புறக்கணித்துவிட்டு, மூன்று அல்லது நான்கு தோல்விகளுக்குப் பிறகு அவர்களை நீக்கிவிட்டு, மிகவும் திறமையான, நல்ல ஃபார்மில் இருக்கும் ஒரு இளம் வீரரை விளையாட வைக்க முடியாது”

“எனவே, அந்த டிரஸ்ஸிங் ரூமில் பாதுகாப்பை உருவாக்க நாங்கள் விரும்புவதால், சில நேரங்களில் உங்கள் வாய்ப்புக்காக நீங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். திடீரென ஒரு மோசமான தொடர் அல்லது மூன்று மோசமான போட்டிகள் அவர்களை ஒரு மோசமான வீரராகவோ அல்லது எங்களை ஒரு மோசமான அணியாகவோ மாற்றிவிடாது. எனவே நமக்கு அந்தத் தொடர்ச்சி இருப்பது மிகவும் முக்கியமானது” என்று கூறி முடித்து இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts