அப்படி நடக்கவேண்டும் என்றால், ஷிகர் தவானுக்கு டீம்ல இடம் கொடுக்கக்கூடாது – முன்னாள் வீரர் தடாலடி பேட்டி!

0
246

இந்திய அணியின் ஸ்கோர் 300-350 ரன்கள் வரவேண்டும் என்றால், ஷிகர் தவான் பிளேயிங் லெவனில் இருக்கக் கூடாது என்று பேட்டியளித்து இருக்கிறார் சபா கரீம்.

வங்கதேச அணியுடன் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது கேப்டன் ரோஹித் சர்மா கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடவில்லை. அந்த இடத்திற்கு இஷான் கிஷன் எடுத்துவரப்பட்டார்.

- Advertisement -

இந்த ஒரு வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக் கொண்ட இஷான், தனது முதல் சதத்தை அடித்த கையோடு அதை இரட்டை சதமாக மாற்றி பல்வேறு சாதனைகளை ஒரே போட்டியில் படைத்து விட்டார். இதனால் அணியில் இருக்கும் சில துவக்க வீரர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

குறிப்பாக இளம் வீரர் சுப்மன் கில் அணியில் கிஷான் கிஷனுக்கு முன் வரிசையில் இருக்கிறார். தற்போது அந்த நிலை மாறியுள்ளதாக தெரிகிறது. ரோகித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பிவிட்டாலும் இரட்டை சதம் அடித்தவரை வெளியில் அமர்த்த முடியாது. ஆகையால் ஷிகர் தவான் வெளியில் அமர்த்தபடுவதற்கு அநேக வாய்ப்புகள் இருக்கின்றன.

இதற்கிடையில் இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் 350 ரன்களை அடிக்க வேண்டும் என்றால், ஷிகர் தவான் பிளேயிங் லெவனில் இருப்பது சரிவராது என்று தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் சபா கரீம். அவர் பேசியதாவது:

- Advertisement -

ஷிகர் தவான் அல்லது இஷான் கிஷன் இருவரில் யார் ரோகித் சர்மாவுடன் விளையாட வேண்டும் என்பதை அணி நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும். குறிப்பிட்ட மைதானத்தில் அணியின் ஸ்கோர் 275 முதல் 300 ரன்கள் இருந்தால் போதும் என்றால், அப்போது ஷிகர் தவான் பிளேயிங் லெவனில் இருக்கலாம். ஆனால் ஸ்கோர் 350 க்கும் மேல் வேண்டும் என்றால், அந்த இடத்தில் இஷான் கிஷன் போன்ற அதிரடி வீரரை கொண்டு வர வேண்டும்.

சுப்மன் கில் நிதானமாக விளையாடக்கூடிய வீரர். அவரையும் ஷிகர் தவான் இடத்தில் வைத்துதான் பார்க்க வேண்டும். ரிஷப் பண்ட் தொடர்ந்து இந்திய அணியில் இருப்பதற்கு காரணம் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர் என்பதால் தான். அப்படிப்பட்ட ஒரு வீரர் தான் இஷான் கிஷன். குறிப்பிட்ட போட்டிக்கு என்ன தேவை என்பதை பொறுத்து, யார் தேவை? என்பதை அணி நிர்வாகமும் கேப்டனும் முடிவு செய்ய வேண்டும்.” என்றார்.