“இனி கவலை இல்லை”.. “பாண்டியாவுக்கு பதிலா ஆட ஆள் கிடைச்சாச்சு” – சிஎஸ்கே வீரரை புகழ்ந்த அஸ்வின்.!

0
6470

அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி அங்கு மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையால் குறிக்கிட்டாலும் இந்தியா இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது t20 போட்டி நாளை நடைபெற உள்ளது.

ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை போட்டிகளை கருத்தில் கொண்டு இந்திய அணியின் முன்னணி வீரர்களுக்கு அயர்லாந்து தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது . இதன் காரணமாக இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட சிவம் துபே ரிங்கு சிங் மற்றும் ஜித்தேஷ் சர்மா போன்ற இளம் வீரர்களுக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது .

- Advertisement -

நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ரிங்கோசிங் மற்றும் சிவம் தூபே இருவரும் பிளேயிங் லெவனில் இடம் பெற்றனர் . மழையின் காரணமாக போட்டி பாதியிலேயே முடிவடைந்ததால் இவர்கள் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை . ஆயினும் சிவம்தூபே பந்து வீசினார் . இந்நிலையில் இந்தப் போட்டி குறித்து பேசி இருக்கும் இந்திய அணியின் முன்னணி வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக இந்தியா அணிக்கு இளம் வீரர்கள் தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து பேசி இருக்கும் அஸ்வின் இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரும் துணை கேப்டனுமான ஹர்திக் பாண்டியா ஒரு சில போட்டிகளில் இருந்து ஓய்வு எடுத்தாலும் அவரது பொறுப்பை ஏற்று விளையாடக்கூடிய இளம்பிரர்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் சிஎஸ்கே அணியின் இளம் வீரரான சிவம் துபே கார்த்திக் பாண்டியாவின் இடத்தை நிச்சயமாக நிரப்புவார் எனவும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

இது பற்றி விரிவாக பேசிய அஸ்வின் ” சிவம் டுபே ஐ பி எல் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடினார் மேலும் சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த தியோதார் கோப்பை போட்டிகளிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் ஒரு இடது கை ஆட்டக்காரராக இருப்பது அணிக்கு இன்னொரு பிளஸ் பாயிண்ட் . மேலும் வித வேகப்பந்துவீச்சாளராகவும் இருக்கிறார் . பினிஷிங் ரோலும் சிறப்பாக செய்யக்கூடிய வீரர்” என்று தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அஸ்வின் ” பினிஷிங் ரோல் செய்யக்கூடிய மூன்று அற்புதமான வீரர்கள் நமக்கு கிடைத்திருக்கிறார்கள். ஜிதேஷ் ஷர்மா அதிரடியான ஆட்டக்காரராக இருப்பதோடு பினிஷிங் ரோல் சிறப்பாக செய்யக்கூடியவர் மேலும் அவர் விக்கெட் கீப்பராகவும் செயல்படுகிறார். அதேபோன்று ரிங்கு சிங் பினிஷிங் சிறப்பாக செய்வதோடு மிகச் சிறந்த பீல்டரும் கூட. பகுதி நேர பந்துவீச்சாளராகவும் அவரை பயன்படுத்த முடியும். இவர்கள் இருவரையும் தவிர சிவம் தூபேவும் பினிஷிங் ரோலில் சிறப்பாக செயல்படுவதோடு மிதவேகப் பந்து வீசக்கூடிய ஆள்ரவுண்டராக இருக்கிறார்” இது போன்ற வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி அணியை பலப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

இனிய ஹர்திக் பாண்டியா ஓய்வின் காரணமாகவோ அல்லது காயம் காரணமாகவோ அணியில் இருந்து வெளியேற அவரது இடத்தில் சிறப்பாக செயல்படக்கூடிய பேக்கப் வீரர்கள் நம்மிடம் இருக்கிறார்கள் அதனால் கவலைப்பட தேவையில்லை என தெரிவித்திருக்கிறார் அஸ்வின். இந்த வருட ஐபிஎல் தொடரில் 16 போட்டியில் விளையாடிய சிவம் டுபே மூன்று அரை சதங்களுடன் 418 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐபிஎல் 2023 இல் 14 ஆட்டங்களில் ஆடிய ரிங்கு சிங் 474 ரன்கள் எடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.