இனி டி20 கிரிக்கெட்டில் ஆங்கர் ரோலுக்கு இடமில்லை; மறைமுகமாக விராட் கோலியை தாக்கிப் பேசினாரா ரோகித் சர்மா?

0
1562
Rohitsharma

நடப்பு ஐபிஎல் தொடரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்ததோடு, பிளே ஆப் சுற்றில் லக்னோ அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்பான சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது!

ஐபிஎல் தொடருக்கான கடந்த மெகா ஏலத்தில் விளையாடாத ஆர்ச்சர் மற்றும் இசான் கிசானுக்கு அதிக தொகைக்கு ஏலத்தில் சென்றதால் பந்துவீச்சு துறையை பலப்படுத்த முடியாமல் மும்பை இந்தியன்ஸ் சிக்கலில் மாட்டிக் கொண்டது. இதனால் கடந்த ஐபிஎல் தொடரில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தையே பிடித்தது.

- Advertisement -

மேலும் இந்த ஆண்டு ஜஸ்ட்ப்ரீத் பும்ரா காயத்தால் விளையாடவில்லை. ஆர்ச்சர் காயத்தால் பாதியில் திரும்பிவிட்டார். இதனால் மிகப்பெரிய நெருக்கடி நிலையில்தான் மும்பை இந்தியன்ஸ் இருந்தது. ஆனால் இதைத் தாண்டி தற்பொழுது முன்னேறி வந்திருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா நேற்றைக்கு முந்தைய நாள் தன்னுடைய பேட்டியில் மிக முக்கியமான விஷயங்களைத் தெளிவாக பேசி இருக்கிறார்.

ரோகித் சர்மா பேசும்பொழுது ” நாங்கள் ஹர்திக் பாண்டியா, பும்ரா மாதிரியான வீரர்களை வாங்கி தயார்படுத்துவோம். பின்பு மக்கள் ஒருநாள் எங்களை சூப்பர் ஸ்டாரின் அணி என்பார்கள். இதே கதைதான் திலக் வர்மா மற்றும் வதேராவுக்கும் நடக்கும்.

- Advertisement -

ஐபிஎல் மாதிரியான டி20 தொடர்களில் நமக்கு குறி வைத்து அடித்து விளையாடி ரன்கள் எடுக்க ஒன்று இரண்டு பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் ஒவ்வொரு பந்துவீச்சாளரும் திறமையானவர்களாக இருப்பார்கள்.

இதனால் நாம் ஒரு பெரிய டோட்டலை எடுக்க எல்லா பந்துவீச்சாளரையும் அடித்தாக வேண்டும். சர்வதேச கிரிக்கெட்டில் கடைசி ஐந்து ஓவர்களில் 60, 70 ரன்கள் என்பது சாத்தியம் இல்லாதது. இதனால் டி20 கிரிக்கெட்டில் பேட்டிங்கில் ஆங்கர் ரோல் செய்வதற்கு எந்த வாய்ப்பு இல்லை என்று நினைக்கிறேன்!” என்று கூறியுள்ளார்!

இந்திய அணியில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பேட்டிங்கில் ஆங்கர் ரோலில்தான் விராட் கோலி செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது ரோகித் சர்மாவின் இந்தக் கருத்து வலைதளங்களில் மிகவும் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது!