விராட் கோலி, பும்ரா இல்லை ; அஷ்வின் கம்பேக் ! வெஸ்ட் இண்டீஸ் டி20ஐ தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

0
387
KL Rahul Indian Cricket Team

இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட், தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஒரு டெஸ்ட் போட்டியைத் தோற்ற இந்திய அணி டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது. இதற்கடுத்து நேற்று முன்தினம் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில், இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு மோதுகிறது. இதற்கடுத்து தொடரின் கடைசி மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் ஜூலை 17ஆம் தேதி நடக்க இருக்கிறது.

- Advertisement -

இதற்கடுத்து வெஸ்ட் இன்டீஸ் செல்லும் இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. முதலில் நடைபெற இருக்கும் மூன்று ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்தத் தொடருக்கு கேப்டனாக ஷிகர் தவானும், துணை கேப்டனாக ரவீந்திர ஜடேஜாவும் அறிவிக்கப்பட்டு இருந்தார்கள். இந்தத் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் வெஸ்ட் இன்டீஸ் அணியோடு விளையாட இருக்கும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடருக்கு கேப்டனாக ரோகித் சர்மா தொடர்கிறார். காயத்தில் இருந்த கே.எல்.ராகுல் அணிக்குத் திரும்புகிறார். மேலும் காயத்தில் இருந்த சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவும் அணிக்குத் திரும்புகிறார்.

வெஸ்ட் இன்டீஸ்க்கு எதிரான டி20 தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி:

- Advertisement -

ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஸ்ரேயாஷ் ஐயர், தினேஷ் கார்த்திக், ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஆர்.அஷ்வின், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், ஆவேஷ்கான், ஆவேஷ்கான், ஹர்சல் படேல், அர்ஷ்தீப் சிங்.