“தோனி இல்ல.. இந்த இந்திய விக்கெட் கீப்பர் நிறைய உலக வீரர்களுக்கு முன்மாதிரியாக இருக்கார்!” – கில்கிரிஸ்ட் ஆச்சரிய தகவல்!

0
1391
ICT

இந்திய அணிக்கு கடந்த 12 ஆண்டுகளாக உலகக் கோப்பைத் தொடர் என்பது எட்டாத விஷயமாகவே இருந்து வருகிறது.

இதில் மிகவும் வருத்தமான விஷயம் என்னவென்றால், மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளில் தர வரிசையிலும் இந்திய அணி எப்பொழுதும் நன்றாகவே இருக்கிறது.

- Advertisement -

ஆனால் ஐசிசி தொடர் என்று வரும் பொழுது இந்திய அணி தமக்கே ஆன திறமையை வெளிப்படுத்தி விளையாடி கோப்பைகளை வெல்வது இல்லை என்பதுதான்.

இந்த முறை இந்திய அணி ஆசியக் கோப்பை தொடருக்கு செல்லும் முன்பாக, இந்திய அணி குறித்து யாருக்கும் பெரிய நம்பிக்கை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

காரணம் இந்திய அணியின் நிறைய முக்கிய வீரர்கள் காயத்தால்விளையாடாமல் இருந்தார்கள். அவர்களின் உடல் தகுதி மற்றும் போட்டித் தகுதி எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை.

- Advertisement -

மேலும் கடந்த டி20 உலக கோப்பையில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா காயம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போதைய உலகக் கோப்பையில் ரிஷப் பண்ட் காயம் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் சுதாரித்து ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் இஷான் கிஷான் தொடர்ந்து உள்ளே கொண்டு வந்து சரி செய்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் ரிஷப் பண்ட் பற்றி பேசி உள்ள ஆடம் கில்கிரிஸ்ட் ” ரிஷப் பண்ட் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தின் மூலம் உலக அளவில் நிறைய விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்களை ஊக்கப்படுத்தி இருக்கிறார். ரிஷப் பண்ட் இவ்வளவு சிறிய வயதில் ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தை பார்ப்பதற்கு மிகச் சிறப்பாக இருக்கிறது. அவரைப் பார்த்து மற்றவர்கள் எப்பொழுதும் நேர்மறையான எண்ணத்தை விளையாட்டுக்கு எடுக்கிறார்கள்.

இந்தியாவில் நிறைய இளம் திறமையாளர்கள் இருக்கிறார்கள். கேஎல் ராகுல் காயத்தில் இருந்த பொழுது, இஷான் கிஷான் அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். பின்பு இருவரும் வந்து ஒரே அணியில் இடம் பெற்று மிகச் சிறப்பாக விளையாடிய வருகிறார்கள்!” என்று கூறியிருக்கிறார்!