“NO.1 இடம் நோ யூஸ்.. நான் பெருமைப்படறது வேற விஷயத்துக்கு..!” – முகமது சிராஜ் அசத்தலான பேட்டி!

0
464
Siraj

இந்திய கிரிக்கெட்டுக்கு தற்போது பொற்காலம் என்றே கூறலாம். கூடவே ஒரு ஐசிசி தொடரையும் வென்றால் அது சந்தேகம் இல்லாமல் நிரூபணம் ஆகும்!

ஏனென்றால் தற்போது மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணியின் பல வீரர்கள் முதல் இடத்தில் இருக்கிறார்கள். மேலும் இந்திய அணியும் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் முதலிடத்தில் இருக்கிறது.

- Advertisement -

இந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட் பந்துவீச்சு தரவரிசையில் முகமது சிராஜ் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் சுப்மன் கில் இருவரும் நேற்று முதலிடத்தை பிடித்து அசத்தியிருக்கிறார்கள்.

மேலும் ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் முதல் பத்து இடங்களில் நான்கு மற்றும் ஆறாம் இடங்களில் இருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் ஒருநாள் கிரிக்கெட் பந்துவீச்சு தரவரிசையை எடுத்துக் கொண்டால் சிராஜ் முதல் இடத்திலும், இதற்கு அடுத்து குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சமி என மொத்தம் நான்கு பந்துவீச்சாளர்கள் முதல் 10 இடங்களுக்குள் இருக்கிறார்கள். மேலும் ஒருநாள் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் தர வரிசையில் ஜடேஜா முதல் இடத்தில் இருக்கிறார்.

இந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் முதல் 10 இடங்களில் பேட்டிங், வந்துச்சு ஆல்ரவுண்ட் செயல்பாடு என, தற்போது விளையாடும் இந்திய அணியில் மொத்தம் எட்டு வீரர்கள் இருக்கிறார்கள். மூன்று வீரர்கள் மட்டுமே முதல் பத்து இடங்களுக்குள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பந்துவீச்சு தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தது குறித்து பேசி உள்ள முகமது சிராஜ் கூறும்பொழுது “உண்மையை சொல்வது என்றால் நான் இதற்கு முன்பு சில காலம் முதல் இடத்தில் இருந்தேன். பின்பு மேலும் கீழும் போய் வந்தேன். எனவே எனக்கு இந்த நம்பர் முக்கியம் கிடையாது. இந்தியா உலகக் கோப்பையை வெல்வது எனது குறிக்கோள். எனது திறமை இந்தியா உலகக் கோப்பையை வெல்ல உதவும் என்று நான் நம்புகிறேன்.

உலகக் கோப்பை தொடரில் இது போன்று மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஒரு அணியின் அங்கமாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். இனி வரும் போட்டிகளில் ஒரு அணியாகவும், ஒரு சிறந்த பந்துவீச்சு பிரிவாகவும் இருந்து தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்!” என்று நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -