இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டி கொண்ட தொடரில் இந்திய அணியில் இருந்து அதிரடி ஆல்ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி காயம் காரணமாக விலகி இருக்கிறார். 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவும் இங்கிலாந்தும் அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது.
இதில் முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அவ்வாறு வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரண்டாவது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த சூழலில் போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு இந்திய அணியில் அதிரடி மாற்றங்களை பிசிசிஐ அறிவித்திருக்கிறது.
நிதிஷ் குமார் பதில் சிவம் துபே சேர்ப்பு:
அதன்படி இந்திய அணியின் ஆல்ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி காயம் காரணமாக எஞ்சிய டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து விலகி இருக்கிறார். இதனால் அவருக்கு பதிலாக சிஎஸ்கே அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் சிவம் துபே சேர்க்கப்பட்டிருக்கிறார்.
டி20 உலக கோப்பையில் சிவம் துபே முக்கிய வீரராக அணியில் இருந்த நிலையில் அவர் இங்கிலாந்துக்கு எதிரான அணியில் தேர்வு செய்யப்படாமல் இருந்தார். இது குறித்து பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்த சூழலில் நிதிஷ்குமார் ரெட்டி இல்லாததால் அவருக்கு பதில் சிவம் துபே தேர்வாகி இருப்பது சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அடுத்த 2 போட்டியில் ரிங்கு சிங் இல்லை:
சிவம் துபே மூன்றாவது டி20 போட்டிக்கு முன்பு இந்திய அணிக்கு திரும்புவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று இந்திய அணியின் ஸ்டார் வீரரான ரிங்கு சிங்கும் இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக விலகி இருக்கிறார். இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அவருக்கு பதிலாக மற்றொரு ஆல்ரவுண்டர் ரிங்கு சிங் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இந்த சூழலில் பயிற்சியின் போது தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எனினும் அவருக்கு பதிலாக எந்த ஒரு மாற்று வீரனும் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரிங்கு சிங் போன்ற இடது கை பேட்ஸ்மேன் இல்லாததால் மூன்றாவது டி20 போட்டியில் சிவம் துபே கண்டிப்பாக பிளேயிங் லெவனின் இடம் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.